கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்.. விலாவரியாக சொன்ன நீதிபதி சந்துரு.. முந்திகொண்டு கேள்வி கேட்கும் பாஜக
சென்னை: மிக முக்கிய பிரச்சனை ஒன்றை தமிழக பாஜக எழுப்பியுள்ளது.. உயிரிழந்த மாணவர் உதயகுமார் குறித்த படத்தை தயாரிப்பீர்களா? படைப்பு சுதந்திரத்தை மதித்து இந்த திரைப்படம் தயாரிப்பதற்கும், வெளியிடுவதற்கும் தி.மு.க., அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்குமா?" என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

யார் இந்த உதயகுமார்?
1971 ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது...
இது அந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இதற்கு எதிராக போராடினர்..

கழுதை
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்படுவதை எதிர்த்த மாணவர்கள், கழுதையின் கழுத்தில் டாக்டர் பட்டம் என்று எழுதப்பட்ட பலகையை அணிவிப்பது, பல்கலைக்கழக சுவர்களில் கேலிச் சித்திரம் வரைவது, என பல வகைகளிலும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இப்படியாக எதிர்த்த மாணவர்களுக்கு தலைமை தாங்கியவர்தான் உதயகுமார்.

கருணாநிதி
பட்டமளிப்பு விழாவில் பலத்த பாதுகாப்புடன் கலந்துகொண்ட கருணாநிதி கிளம்பிச் சென்ற பிறகு, மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை போலீசார் நடத்தியதாகவும், மறுநாள் காலை மாணவர் உதயகுமார் பல்கலைக்கழக குளத்தில் பிணமாக மிதந்ததாகவும் கூறப்பட்டு, மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது அன்றைய காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சுயசரிதை
இந்த போராட்டத்தை நீதிபதி சந்துரு தன்னுடைய 'நானும் நீதிபதி ஆனேன்' என்ற சுயசரிதையில் நினைவு கூர்ந்துள்ளார். சந்துரு எழுதியதன் சுருக்கம் இதுதான்: "நடந்த கலவரத்தில் 1971, ஜூலை 23 அன்று பி.உதயகுமார் எனும் மாணவர் உயிரிழக்கிறார். அந்த நேரத்தில் சரியாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட எம்ஜிஆர், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை வளர்க்க சூறாவளி பிரச்சாரம் செய்கையில், சிதம்பரம் வருகையில் தனது அரசியலுக்காக உதயகுமாரின் மரணத்தை பயன்படுத்திக் கொள்கிறார்...

எம்ஜிஆர்
கட்சியில் உள்ளபோது மௌனம் சாதித்த எம்ஜிஆருக்கு இது அரசியல் கருவியாக கிடைத்தது.. அந்த நேரத்தில் போராடிய எஸ்எப்ஐ மாணவர்களுக்காக நான் வாதாடியபோது, ஆங்கிலத்தில் வாதாட ப.சிதம்பரத்தை அழைத்து சென்றேன்.. அதற்கு அவர் கட்டணம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை.. 2001ல் எனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்ததும் மாநில முதலமைச்சரிடம் விருப்பம் கேட்கப்படும்போது, அப்போதும் முதல்வராக இருந்த கருணாநிதி எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இசைந்தார்..

விமர்சனம்
"ஒருவேளை,காலம் மனிதர்களைப் பண்படுத்தலாம்! மாணவர்கள் இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றியதுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சம்பவங்களை நேரடியாக நான் விமர்சித்திருப்பினும், அன்றைய முதல்வர் கலைஞர் பின்னர் ஆட்சியை இழந்து, பல வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, என்னுடைய பெயர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அரசின் கருத்துரை கேட்டபோது உடனே இசைவு அளித்தார்." என்பது உட்பட பல்வேறு விஷயங்களை சந்துரு தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்...

அறிக்கை
இதுகுறித்துதான், தமிழக பாஜக ஒரு கேள்வி எழுப்பி உள்ளது.. அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: "நானும் நீதிபதி ஆனேன்" என்ற சுயசரிதையை நீதிபதி சந்துரு எழுதியுள்ளார். அதில், 1971ம் ஆண்டு சிதம்பரம் பல்கலையில், அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.. அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம், அவர்கள் மீதான போலீஸ் துறையின் அடக்கு முறையில் மாணவர் உதயகுமார் உயிரிழந்தது, அந்த வழக்கில் நடந்த உண்மை சம்பவங்கள் குறித்து எல்லாம் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி
இந்த சம்பவத்தை திரைப்படமாக்க, சமூக போராளிகள், படைப்பாளிகள் என அடையாளப்படுத்தி கொள்பவர்கள் யாரேனும் முன் வர வேண்டும்.. நீதிபதி சந்துரு மற்றும் அந்த வழக்கில் ஆஜரான ப.சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? படைப்பு சுதந்திரத்தை மதித்து இந்த திரைப்படம் தயாரிப்பதற்கும், வெளியிடுவதற்கும் தி.மு.க., அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்குமா?" என்று நாராயணன் திருப்பதி கேட்டுள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications