கொங்கு நாடு தனி மாநிலம்.. மத்திய அரசு பரிசீலனையில் உள்ளது: பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன்
சென்னை: கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான பரிசீலனை மத்திய அரசிடம் தொடக்க நிலையில் உள்ளது என பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தமிழக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடர்பான மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்கு நாடு என இடம்பெற்றிருந்தது.

தற்போது தமிழக பாஜக தலைவர்கள், கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை ஆதரித்து பேசி வருகின்றனர். பெருந்துறை நகர பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் கொங்கு நாடு தனி மாநிலம் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் கூறியதாவது: மக்களின் கோரிக்கைகள் அடிப்படையில்தான் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான சமீபத்திய உதாரணம் தெலுங்கானா தனி மாநிலம்.
அதேபோல் அந்த பகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. பெரும்பான்மை மக்களின் விருப்பம்தான் நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. கொங்குநாடு தனி மாநிலம் என்பது குறித்த மத்திய அரசின் பரிசீலனை தொடக்க நிலையில் உள்ளது. இவ்வாறு கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications