ஆஹா.. வயிற்றில் பாலை வார்த்த திமுக.. ரேஷனில் பருப்பு,எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும்.. பிடிஆர் உறுதி
ரேசன் கடைகளில் பருப்பு, எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும் என்று பிடிஆர் தெரிவித்துள்ளார்
சென்னை: ரேசன் கடைகளில் பருப்பு, எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்துள்ளது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
Recommended Video
2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் தொடங்கி உள்ளது..
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது...

தாக்கல்
தமிழ்நாட்டில் முதன் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது... இதனையடுத்து, சட்டப்பேரவையில் எல்லாமே கம்ப்யூட்டர் கணினி மயமாகியுள்ளன. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு இது முதல் பட்ஜெட் ஆகும்.. பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதாலும் எதிர்பார்ப்புகள் கூடி உள்ளது..

அதிமுக
பிடிஆர் பேச ஆரம்பிக்கும்போதே, பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு தங்களை பேச வாய்ப்பு கேட்டுவிட்டு அதன்பிறகு பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு அதிமுகவினர் கூச்சலிட்டனர்.. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியிலும் ஈடுபட்டனர்.. பட்ஜெட் தாக்கலுக்குப்பின் பேச அனுமதிக்கிறேன் என்று பிடிஆர் தெரிவித்ததால், அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

வாக்குறுதி
இதற்கு பிறகு பிடிஆர் பேசும்போது, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக செயல்படுத்துவோம் என்று முதல் அறிவிப்பாக தெரிவித்தார்.. தொடர்ந்து பல்வேறு துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. அதேபோல, தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.405.13 கோடியும், தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

அரிசி எண்ணெய்
அந்த வகையில், புதிதாக நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று தனது பட்ஜெட் கூட்டத்தொடரில் பிடிஆர் அறிவித்துள்ளார்.. பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் நியாயவிலைக்கடைகள் அமைக்கப்பட்டு உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் ரேசன் கடைகளில் பருப்பு, எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தன்னுடைய அறிவிப்பில் உறுதி தந்துள்ளார். இது அடித்தட்டு மக்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது போல உள்ளது..!
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications