ஒரே நேரத்தில் ஏராளமான டிரைவர், கண்டக்டர்கள் ஓய்வு.. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெரும் நெருக்கடி?
சென்னை: டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால், பஸ்கள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் டிரைவர்கள், கண்டக்டர்கள் உட்பட 600-700 ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற உள்ளதால், போக்குவரத்துக் கழகங்கள் மற்றொரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள போகின்றன.
பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (எஸ்இடிசி) உட்பட 8 போக்குவரத்துக் கழகங்கள் என தமிழநாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில் 18,723 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

1404 ஸ்பேர் பேருந்துகள் உட்பட 20,127 பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகங்களில் இருக்கின்றன. இதில் டிரைவர்கள், கண்டக்டர்கள் உட்பட 1.16 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள்
2014 முதல் புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், அரசு பேருந்துகளில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் காலியிடங்களின் எண்ணிக்கையால், சென்னை உள்பட மாநகராட்சிகளில் அரசு பஸ் இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாத இறுதியில் கிட்டத்தட்ட 600-700 ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவார்கள் என சென்னை மாநகராட்சி போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெரும் நெருக்கடியை அரசு போக்குவரத்துக் கழகங்கள் சந்திக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும் போது, "போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதுவே பேருந்து ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகாரிக்காமல் போக காரணமாக உள்ளது. இப்படியே புதிதாக ஆட்களை நியமிக்காமலேயே இருந்தால், பேருந்து இயக்கம் கடுமையாக பாதிக்கப்படும்," என்றார்.
இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் ஓய்வு பெற்ற ஓட்டுநர்களை நியமிப்பதற்கான முயற்சிகள். மற்றும் நடத்துனர்களுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அரசு வேறு வழிகளை கையாண்டது. அதாவது போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக மாற்றி உத்தரவிட்டது. இதை வைத்து கடந்த இரண்டு ஆண்டுகள் சமாளிக்க முடிந்தது. இந்நிலையில் புதிய ஓட்டுநர் நடத்துனர்களையும் நிரப்பாவிட்டால் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.
ஏனெனில் கடந்த சில வருடங்களில் மட்டும் 8 போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 28,559 ஆகக் குறைந்துள்ளது. மார்ச் 3, 2015 இல் 1,44,818 ஊழியர்களாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை, பிப்ரவரி 28, 2023 அன்று 1,16,259 ஆகக் குறைந்துள்ளது.
சிஐடியுவுடன் இணைந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (டிஎன்எஸ்டிஇஎஃப்) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் இதுபற்றி கூறும் போது, டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க புதிதாக கண்டக்டர், டிரைவர் பணிக்கு ஆட்களை எடுப்பது தான் ஒரே வழி .
கடந்த 2014ம் ஆண்டு முதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாற்றாக ஊழியர்கள் இல்லை. காலி பணியிடங்களை குறைக்க, கடந்த 2018ல், 2000 பஸ்கள் எண்ணிக்கையை குறைக்க, முந்தைய அ.தி.மு.க., அரசு அரசாணை வெளியிட்டது. கொரோனா காலத்தில் ஓய்வுபெறும் வயதை 60 ஆக மாற்றியதால் கடந்த இரண்டு ஆண்டுகள் சேவைகளை சமாளிக்க முடிந்தது. தற்போது காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளதால், பஸ் இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதுபற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களில் 600 முதல் 700 பணியாளர்கள் அடுத்த சில நாட்களில், அதாவது ஜூன் 30-ஆம் நாளுடன் ஓய்வு பெற இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கவலையளிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், ஒரே நேரத்தில் 700 பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். அதனால், அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தர பொதுமக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இந்தியாவில் மிகவும் வலிமையான பொதுப்போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானது. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாததால் அதன் செயல்திறன் படிப்படியாக குறைந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்கள் வலிமையாக இயங்க வேண்டுமானால் காலாவதியாகும் பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும்; ஓய்வு பெறும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாற்றாக புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால், அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக புதிய ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பணியமர்த்தப்படவில்லை என்பது மட்டுமின்றி, 7 ஆண்டுகளில் வாழ்நாள் காலம் முடிவடைய வேண்டிய பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் போக்குவரத்துக் கழகங்கள் படிப்படியாக முடங்குகின்றன.
2015-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்பட ஒரு லட்சத்து 44,818 பேர் பணியாற்றி வந்தனர். அவர்களில் 28,559 பேர் கடந்த பிப்ரவரி மாதம் வரை ஓய்வு பெற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 700 பேர் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வு பெற்றவர்களையும் கணக்கில் கொண்டால், மொத்த காலியிடங்கள் 30 ஆயிரத்தைத் தாண்டும். 2015-ஆம் ஆண்டு பணியாளர் எண்ணிக்கையில் இது 21 விழுக்காடு ஆகும். கடந்த பத்தாண்டுகளில் புதிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், 21 விழுக்காடு பணியாளர்கள் இல்லாவிட்டால், அதே அளவுக்கு செயல்திறன் பாதிக்கப்படுவது உறுதி.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்திறன் கடந்த பத்தாண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதை, போக்குவரத்துத் துறையின் கொள்கைவிளக்கக் குறிப்பில் உள்ள புள்ளிவிவரங்களே உறுதி செய்கின்றன.
* 2014-15ஆம் ஆண்டின் நிறைவில் அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இருந்த பேருந்துகளின் எண்ணிக்கை 22,809 ஆகும். 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 20127 ஆக குறைந்து விட்டது. 9 ஆண்டுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி 11.76% ஆகும்.
* 2014-15 ஆம் ஆண்டில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை 20,684. 2023 பிப்ரவரி மாத நிலவரப்படி இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 18,723. 9 ஆண்டுகளில் வீழ்ச்சி 9.48%.
* 2014-15ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் ஒரு நாளைக்கு இயக்கப்பட்ட மொத்த தொலைவு 91.90 லட்சம் கி.மீ ஆகும். 2023 பிப்ரவரியில் இது 77.71 லட்சம் கி.மீ ஆக குறைந்து விட்டது. 9 ஆண்டுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி 15.59% ஆகும்.
* 9 ஆண்டுகளுக்கு முன் 1.82 லட்சம் கி.மீ ஓடிய பின் மாற்றப்பட்ட உருளிப்பட்டைகள் (டயர்) இப்போது 3.03 லட்சம் கி.மீக்கு ஒருமுறை தான் மாற்றப்படுகின்றன. இதனால் விபத்துகளும், பேருந்துகள் பழுதடைந்து நிற்பதும் அதிகரித்திருக்கின்றன.
* 9 ஆண்டுகளுக்கு முன் ஒரு பேருந்துக்கு மொத்தம் 6.39 பணியாளர்கள் இருந்தனர். ஆனால், இப்போது அந்த எண்ணிக்கை 5.77 பேராக குறைந்து விட்டது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்திறன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டதை விட ஒரு நாளைக்கு சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர்கள் குறைவாகவே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றால், அது நிச்சயமாக கவலை அளிக்கும் செய்தி தான். அதனால், கிராமப்புற ஏழை மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications