நெருக்கடியில் ஆடைத்துறை.. சிறப்பு அவசரகால கடன் திட்டத்தை அறிவியுங்கள்.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
சென்னை : ஆடைத்துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைசர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா தாக்கம், ரஷ்யா உக்ரைன் போர், பொருளாதார மந்த நிலை யால் ஆடை ஏற்றுமதி துறை கடுமையான நெருக்கடியில் உள்ளது என்றும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோடைக்காலத்திற்கான கொள்முதல் 40 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெருக்கடியில் இருந்து மீண்டு வர குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை உடனடியாக அறிவிக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த, 2021 செப்டம்பர் மாதம், நம் நாட்டில், 9,571 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இந்தாண்டு செப்டம்பர் மாதம், 8,554 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது. கொரோனா காரணமாக சீனா மற்றும் ஹாங்காங்கில் தேவை குறைந்துள்ளதாலும், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகவும் இந்திய ஏற்றுமதியும் சரிவினைக் கண்டுள்ளது. இந்நிலையில், ஆடைத்துறை நெருக்கடியை சமாளிக்க உதவக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடுமையான நெருக்கடி
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், "கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல பல காரணிகளால் ஆடை ஏற்றுமதித் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் இப்போது கூர்மையான சரிவைக் காட்டுகிறது.

அபாயத்தில் வேலைவாய்ப்பு
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சந்தைகளை பூர்த்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி தொகுப்புகளில் ஒன்றான திருப்பூர் அலகில் 95% குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோடைக் காலத்திற்கான கொள்முதல் ஆணைகள் தற்போது சுமார் 40% குறைந்துள்ளதாகவும், குறைந்த தேவை காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும் அவற்றின் குறு சிறு நிறுவன விநியோகஸ்தர்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. தொழிலாளர் வர்கத்தில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள கிராமப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

சிறப்பு அவசரகால கடன் வரி
மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்கவேண்டும். புதிய திட்டத்தின் கீழ் 20 சதவீதம் (20%) கூடுதல் பிணையமற்ற கடன் வழங்கப்படலாம்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
மேற்காசிய போர் பதற்றம்.. அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications