வீரமரணமடைந்த வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் நிதி உதவி- தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லடாக் எல்லையில் சீனா ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Recommended Video

    India China Border Fight வீர மரணம் எய்தினார் தமிழக வீரர் பழனி

    லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சீனா ராணுவம் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    TN CM Edappadi Palaniswami grants Rs 20 lakh solatium to kin of slain Havildar Palani

    நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது சீனாவின் இந்த அத்துமீறிய தாக்குதல். சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பழனியும் ஒருவர்.

    ராணுவ வீரர் பழனியின் மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரர் பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். தகுதி அடிப்படையில் பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+