சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. தமிழ்நாட்டிலேயே வேக்சின் உற்பத்தி.. பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் அதிரடி மீட்டிங்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டிலேயே வேக்சின் உற்பத்தி செய்யும் வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளனர். பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார்.

Recommended Video

    செங்கல்பட்டு விரையும் Bharat Biotech அதிகாரிகள் | HLL Vaccine Production Center | Oneindia Tamil

    இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வேக்சின் போடுவதில் பல்வேறு மாநிலங்கள் வேகம் காட்டி வருகின்றன. தினமும் வேக்சின் போடப்படும் மக்களின் எண்ணிக்கை 2.3 லட்சத்தை தாண்டி உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்திலேயே வேக்சின் தயாரிக்கும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வேக்சின் தயாரிக்கவும் தமிழக அரசு முயன்று கொண்டு இருக்கிறது.

    வேக்சின்

    வேக்சின்

    தமிழ்நாட்டிலேயே வேக்சின் செய்யும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் உள்ள நிலையில் இன்று பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் சுஜித்ரா இலா, செயல் இயக்குனர் சாய் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை

    ஆலோசனை

    தமிழகத்தில் வேக்சின் உற்பத்தி மையத்தை அமைப்பது குறித்து இவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில் தமிழகத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி கூடத்தை தமிழகத்தில் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் இறையன்பு இந்த ஆலோசனை கூட்டத்தில் உடன் இருந்தார்.

    பாரத் பயோடெக்

    பாரத் பயோடெக்

    பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் வேக்சினை உருவாக்கி நிறுவனம் ஆகும். இந்தியாவில் இந்த நிறுவனம் மூலம் நாடு முழுக்க வேக்சின் வழங்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட வேக்சின் மையம் ஆகும் இது. இந்த நிலையில் தமிழகத்திலும் இதன் உற்பத்தி மையத்தை தொடங்க முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    சந்திப்பு

    சந்திப்பு

    நேற்றுதான் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவபத்மநாபன் சந்திப்பு நடத்தினார். இந்தியாவில் இயங்கி வரும் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கிளையின் மேலாண்மை இயக்குநராக இவர் இருக்கிறார். நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர் சில நிமிடங்கள் ஆலோசனை செய்தார். அப்போதே தமிழகத்தில் ஆஸ்டர்செனகா வேக்சின் உற்பத்தி செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சிவபத்மநாபன், மற்றும் அந்த நிறுவனத்தின் இணை இயக்குநர் அனுராதா குமார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கினர்.

    English summary
    Tamilnadu CM M K Stalin meets Bharat Biotech officials on vaccine production in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X