இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை மாற்றியுள்ளோம்.. சுதந்திர தின உரையில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: முதன்முதலாக எனக்கு தேசியக்கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி என சுந்திர தின உரையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நமது நாட்டின் 75-வது சுந்திர தின விழா இன்று கோலாகாலமாக கொண்டாடப்படுகிறது.
Recommended Video
இதனை தொடர்ந்து சென்னை கோட்டைக்கு தேசிய கொடி ஏற்ற வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தமிழக தலைமை செயலாளர் இறையன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போலீஸ் அதிகாரிகளை அறிமுகம் செய்து வந்தார். இதனை தொடர்ந்து கோட்டையில் முதன்முதலாக தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தேசியக்கோடி ஏற்றிய ஸ்டாலின்
இதன்பின்னர் தமிழக மக்களுக்கு அவர் ஆற்றிய சுதந்திர தின உரை பின்வருமாறு:- தாயின் மணிக் கொடி பாரீர்.. இந்த நாளில் இந்திய தியாகிகள் அனைவருக்கும் எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன். முதன் முதலாக தேசியக்கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொது வாழ்க்கையில் 50 அன்டுகளாக உழைத்த என்னை முதல்வாராக ஏற்றுக் கொண்ட தமிழக மக்களுக்கு நன்றி. 75-வது சுதந்திர தூண் கல்லாலும், மண்ணாலும் உருவானதல்ல. பல்வேறு தியாகிகளின் ரத்தத்தாலும், சதையாலும் உருவானதாகும்.

கருணாநிதி செய்த சாதனை
இந்தியாவின் அனைத்து முதல்வர்களுக்கும் இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் சுதந்திர சிந்தனையாளர் கருணாநிதி. இந்தியாவில் எத்தனையோ முதல்வர்கள் வந்தாலும் முதல்வர்கள் கொடியேற்றலாம் என்னும் உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி. திராவிடக் கட்சியின் ஆணிவேரான நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த நூற்றாண்டு இந்த ஆண்டாகும். மகாகவி பாரதிக்கும் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

தமிழகம் மாற வேண்டும்
சீன போரின் போது இந்திய நாட்டிற்காக நிதி திரட்டி கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. பாகிஸ்தான் போரின் போது இந்தியாவுக்காக நிதி திரட்டியவர் கருணாநிதி. கார்கில் போரின் போது 3 தவணைகளாக நிதி திரட்டி கொடுத்தவரும் கருணாநிதிதான். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டும்.

இந்தியாவுக்கே முன்மாதிரி
இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டை நாம் மாற்றியுள்ளோம். திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். கொரோனா நோய் தொற்றை நாம் வலுவாக போராடி வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வற்ற மனித உரிமை சமுதாயமாக நாம் மாற வேண்டும். நேர்மையுடைய தமிழ்நாட்டை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் அனைவரும் காந்திக்கு உறுதுணையாக இருந்தனர்.

மாகத்மா காந்தியின் பெருமை
தேசப்பிதா மாகத்மா காந்தி தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த மரியாதையை கொண்டிருந்தார்.சாதி, மதம் பிரிவுள்ள இந்திய திருநாட்டை வழிநடத்த நமக்கு கிடைத்த சிறந்த ஆயுதம் காந்தியமாகும். மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ 6 கோடியில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும். விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரின் ஓய்வூதியம் ரூ.8,500-ல் இருந்து, ரூ 9 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications