அதிகரிக்கும் பாதிப்பு- மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்- ஊரடங்கு? முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
சென்னை: நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,57,545 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,22,193. நாட்டில் தற்போது கொரோனாவுக்கு 15,873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பிரதமர் மோடி வரும் 27-ந் தேதி மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது, ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications