சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொல்காப்பிய பூங்காவில் நடை பயிற்சி...அப்பா வைத்த மருத மரத்தை ஆசையோடு பார்த்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலையில் தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் தனது தந்தையாரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த பாறையை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்! உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொல்காப்பியப் பூங்காவில் இன்று நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தனது தந்தையார் பெயர் பொறித்த கல்வெட்டுக்களையும்,அவர் நட்டு வைத்த மருதமரத்தையும் ஆவலுடன் பார்த்தார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல் ஆரோக்கிய விசயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். சைக்கிளிங், வாங்கிங், உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் அடிக்கடி வைரலாகும்.

இன்றைய தினம் தொல்காப்பிய பூங்காவில் காலையில் நடைபயிற்சி செய்த ஸ்டாலின் அந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாடர்ன் உடையில் நிவிஷா.. எல்லாம் குறைஞ்சு போச்சே.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!மாடர்ன் உடையில் நிவிஷா.. எல்லாம் குறைஞ்சு போச்சே.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சுவரை வைத்து சித்திரம்

சுவரை வைத்து சித்திரம்

இன்றைய உடற்பயிற்சி தொல்காப்பியப் பூங்காவில் நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல்நலத்தைப் பேணுவதிலும் செலுத்தவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும்! உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள்! என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருணாநிதியின் பெயர்

கருணாநிதியின் பெயர்

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 2007ஆம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011ஆம் ஆண்டில் அதைத் திறந்துவைத்தார். அந்த கல்வெட்டு பூங்காவில் உள்ளது. அதனை ஆவலோடு பார்த்து ரசித்தார் ஸ்டாலின்.

பெயர் சூட்டிய கருணாநிதி

பெயர் சூட்டிய கருணாநிதி

பழந்தமிழர்களிலும் பழந்தமிழர் தொல்காப்பியர். அவருக்குப் பிறகுதான் வள்ளுவர், மற்ற ஞானிகள் எல்லாம் தமிழகத்திலே தோன்றி நமக்கெல்லாம் ஞானப்பால் வார்த்தார்கள். அத்தகைய முதல் தமிழன், தொல்காப்பியருடைய பெயரை, இந்த அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவிற்கு சூட்டுவதில் நான் பெருமையடைகிறேன். தமிழன் என்கிற பெருமிதத்தோடு, இந்தப் பெயரைச் சூட்டி மகிழ்கிறேன் என்றார்.

மரத்தை பார்த்த ஸ்டாலின்

மரத்தை பார்த்த ஸ்டாலின்

பூங்காவை திறந்து வைத்த அப்போதய முதல்வர் கருணாநிதி தனது கையினால் அடையாளமாக மருத மரக்கன்றையும் நட்டு வைத்தார். அந்த மரக்கன்று தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. அந்த மரத்தை ஆர்வமாக பார்த்து ரசித்தார் முதல்வர் ஸ்டாலின்.

சுற்றுச்சூழல் பூங்கா

சுற்றுச்சூழல் பூங்கா

2011ஆம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் தொல்காப்பிய பூங்கா என்ற பெயர் பலகையை அகற்றியது. அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என பெபயர் மாற்றம் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் சமீபத்தில் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தொல்காப்பியப் பூங்கா பெயர்பலகையை மீண்டும் வைக்க உத்தரவிட்டார்.

புதுப்பொலிவு பெறும் பூங்கா

புதுப்பொலிவு பெறும் பூங்கா

இதனையடுத்து அந்த பூங்காவுக்கு மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது. அந்த பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பூங்கா பராமரிக்கப்படாத காரணத்தினால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பெயரில் தொல்காப்பியர் பூங்கா பராமரிப்பு பணிகள் 1 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று கே. என் நேரு கூறியிருந்தார். இதனையடுத்து பூங்காவின் பெயர் உடனடியாக மாற்றப்பட்டு தற்போது பொலிவு பெறத் தொடங்கியுள்ளது.

English summary
TamilNadu Chief Minister MK Stalin Visted Tholkappia Poonga today. Former CM Karunanidhi on 22 January 2011 named after the renowned Tamil scholar Tholkappiar. About 65 percent of the park is covered by water. Adayar Eco park and named after Tholkappiar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X