குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: 2026 குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி மே 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி ஜூன் 2 ஆம் தேதியும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. குருவின் இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. என்ன பலன்கள் எல்லாம் கிடைக்கப் போகிறது என விரிவாகப் பார்க்கலாம்.

guru-peyarchi-2026-simmam-rasi-palan-career-growth-wealth-major-success-ahead

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சுபச் செலவுகள் அதிகரித்தாலும், வாழ்க்கையில் பல முக்கியமான முன்னேற்றங்களும் ஏற்படும். குடும்ப விஷயங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. தாய்வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

குரு விஜய்

குருவின் பார்வையால் தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். வருமானம் அதிகரித்தாலும் செலவுகளும் கூடும். குருவின் நட்சத்திர சஞ்சார காலங்களில் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.

பதவிகள் தேடி வரும்

புதிய பதவிகள், தொழில் முன்னேற்றம், வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் வியாபார வளர்ச்சி கிடைக்கும். தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் முதுகுவலி மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை.

வெளிநாடு யோகம்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு தொடரும். இருப்பினும் தகுதிக்கேற்ற பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு தாமதமாக கிடைப்பதாக எண்ணம் ஏற்படலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமையக்கூடும். கலை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு மூத்தவர்களின் ஆதரவும் பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகளும் கிடைக்கும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் முதுகுத்தண்டு வலி மற்றும் பார்வை தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது நல்லது. மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சவால்களை வெற்றியாக மாற்றி சாதனை படைக்கக்கூடிய முக்கியமான காலகட்டமாக அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+