டார்கெட் "டெல்லி".. தூது போகும் திமுக.. துபாயிலிருந்து திரும்பியதும் முதல் வேலை! முதல்வர் பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்திற்கு பின் முக்கியமான சில கூட்டங்களை டெல்லியில் நடத்த உள்ளதாக அறிவாலய தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமாக தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப்பில் இருந்த ஆட்சியையும் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து நேற்று 5 மாநில காங்கிரஸ் தலைவர்களை பதவி விலகும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் வலிமை இழந்துள்ள நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநில கட்சிகள்

மாநில கட்சிகள்

ஏற்கனவே மாநில கட்சிகள் சேர்ந்து மிகப்பெரிய கூட்டணியை பாஜகவிற்கு எதிராக உருவாக்க முயன்று கொண்டு இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். முதலில் இதில் காங்கிரசை சேர்க்க மம்தா ஆர்வம் காட்டாத நிலையில், தேர்தல் முடிவிற்கு பின் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம் என்பதை உணர்ந்து காங்கிரஸ் கட்சியையும் கூட்டணிக்கு அழைத்துள்ளார்.

அழைப்பு

அழைப்பு

காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி வைக்க வேண்டும். ஒன்றாக லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று மம்தா அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணிக்கு தலைமை ஏற்க கூடாது என்று மம்தா மறைமுக கண்டிஷன் போட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் - மாநில கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. மாநில கட்சிகளில் திமுக மட்டுமே காங்கிரசுடன் நெருக்கமாக இருக்கும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அவசியம்

திமுக அவசியம்

இதனால் தேசிய அளவில் காங்கிரசை உள்ளடக்கிய ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு திமுகவின் தூதும் அவசியம். காங்கிரஸிடம் மம்தா, கேசிஆர் முஷ்டியை முறுக்கி வரும் நிலையில் கூட்டணியை சாத்தியமாக்க திமுக அவசியம். இதற்காக திமுக விரைவில் தூது போக போவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மற்ற மாநில கட்சிகள் உருவாகும் கூட்டணியில் காங்கிரசை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சியில் திமுக இறங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

முரசொலி

முரசொலி

இதை முன்னிட்டே நேற்று முதல்நாள் வந்த முரசொலி தலையங்கத்தில் கூட கூட்டணியின் முக்கியத்துவம் பற்றி திமுக பேசி இருந்தது. 2024 தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று இப்போது தான் அறிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா. அணிச் சேர்க்கை என்பது மிகமிக முக்கியமானது என்பதே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தி உள்ளன என்று முரசொலி கட்டுரையிலும் கூறப்பட்டு இருந்தது. காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தனி தனியாக 2024 தேர்தலை சந்தித்தால் அது வாக்குகள் பிரிய காரணமாக அமையும் என்பதை மனதில் வைத்து திமுக மாபெரும் கூட்டணிக்கு புஷ் செய்து வருகிறது.

மாநில கட்சிகள்

மாநில கட்சிகள்

இதனால் மாநில கட்சிகள் - காங்கிரஸ் இடையே இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் திமுக இறங்க போகிறதாம். டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட திமுக கட்சி அலுவலகம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் மொத்தமாக காங்கிரஸ் - மாநில கட்சிகள் இடையே இணைப்பை உண்டாக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்விற்கு சோனியா, மம்தா, உத்தவ் தாக்கரே, கேசிஆர் ஆகியோரை அழைக்கும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறாராம்.

முதல் வேலை

முதல் வேலை

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச எக்ஸ்போவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இந்த மாதம் 26ம் தேதி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு இவருக்கு 'நம்மில் ஒருவர்' என்ற பாராட்டு விழாவை நடத்த வெளிநாடு வாழ் தமிழர் இந்தியச் சங்கம் திட்டமிட்டுள்ளது. அங்கு இருந்துவிட்டு மாத இறுதியில் நேராக இவர் டெல்லிக்கு நேராக வர இருக்கிறார். பின்னர் திமுக கட்சி அலுவலகம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக.. அல்லது பின்பாக தேசிய கூட்டணி பற்றி பேசப்படும் என்று கூறுகிறார்கள்.. இதற்கு முன்பே இதேபோல் சென்னையில் சில கூட்டங்களை திமுக நடத்தி எதிர்கட்சிகளை அழைத்து இருந்தாலும் டெல்லியை டார்கெட் செய்து முதல்முறை இந்த கூட்டம் நடக்க போவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+