ஸ்பீடு போஸ்ட்.. அஞ்சல் துறையின் பெரிய மாற்றம்! பதிவு தபால் சேவை நிறுத்தம் ஏன்?தமிழக காங்கிரஸ் கேள்வி
சென்னை: பதிவு அஞ்சல் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், துரித அஞ்சல் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தன்னுடைய எக்ஸ் தளத்தில் விரிவான விளக்கத்தையும் வெளியிட்டிருக்கிறார். செல்வப்பெருந்தகையின் இந்த கோரிக்கையானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இந்திய அஞ்சல் துறையில் 1.59 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தன.. இதன்மூலம், உலகின் மிகப்பெரிய அஞ்சல்துறையாக இந்திய அஞ்சல்துறை விளங்கி கொண்டிருக்கிறது.

இந்திய அஞ்சல் துறை மூலமாக பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் நிலையில், இவற்றில் பதிவு தபால் சேவை முக்கியமானதாக இருக்கிறது. பதிவு தபால் சேவை கடந்த 1854-ல் இந்திய அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.
நீதிமன்றம், வங்கி, அரசு துறை சார்ந்த கடிதங்கள் உள்ளிட்டவை பதிவு தபால்கள் மூலமே அனுப்பப்படுகின்றன.. அதேபோல முக்கியமான ஆவணங்கள், சான்றுகளை அனுப்பும் போது, வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக பதிவு தபால்களே உள்ளன.
பதிவு தபால் - வசதிகள்
அதாவது, பதிவு தபால் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரே பெற முடியும் என்பது இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.. அத்துடன், பாதுகாப்பான ஆவண விநியோகத்துக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் நம்பகமான சேவையாகவும் பதிவு தபால் சேவை விளங்குகிறது.
எனினும், அஞ்சல் செயல்பாடுகளை நவீனமயமாக்கும் நோக்கில், 171 ஆண்டு கால சேவையாக திகழும் பதிவு தபால் சேவையானது, கடந்த செப்டம்பரில் நிறுத்தப்பட்டது.. மேலும், விரைவு தபால் சேவையுடனும் இணைக்கப்பட்டது.
டிஜிட்டல் விருப்பங்களால், பதிவு செய்யப்பட்ட தபால் பயன்பாடு குறைந்துள்ளதாகவும், மேம்பட்ட கண்காணிப்பு, வேகமான விநியோக நேரம் மற்றும் சிறந்த செயல்பாட்டுத் திறன் கொண்ட விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் காரணங்கள் சொல்லப்பட்டு, இதன்காரணமாக விரைவு தபால் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டது..
அஞ்சல்துறையில் மாற்றம்
இதுகுறித்து அஞ்சல்துறை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "ஆவணங்களுக்கு அதிகபட்சம், 50 கிராமுக்கு உள்ளூருக்கு, 19 ரூபாய், 200 கி.மீ., வரை 47 ரூபாய், 201 கி.மீ.,ல் இருந்து, 2,000 கி.மீ., வரை 47 ரூபாய்.
அதே நேரத்தில், 51 கிராமில் இருந்து 250 கிராம் வரை உள்ளூரில் 24 ரூபாய், 200 கி.மீ., வரை 59 ரூபாய், 201 கி.மீ.,ல் இருந்து 500 கி.மீ., வரை 63 ரூபாய், 501 கி.மீ.,ல் இருந்து 1,000 கி.மீ., வரை 68 ரூபாய், 1,001 கி.மீ.,ல் இருந்து 2,000 கி.மீ., வரை 72 ரூபாய், 2,000 கி.மீ.,க்கு அப்பால் 77 ரூபாய். இதற்குமேல், 251 கிராமில் இருந்து 500 கிராம் வரை உள்ளூரில் 28 ரூபாய்.
200 கி.மீ.,க்குள் 70 ரூபாய், 201 கி.மீ.,ல் இருந்து 500 கி.மீ., வரை 75 ரூபாய், 501 கி.மீ., இருந்து 1,000 கி.மீ., வரை 82 ரூபாய், 1,001 கி.மீ.,ல் இருந்து 2,000 கி.மீ., வரை 86 ரூபாய், 2,000 கி.மீ.,க்கு அப்பால் 93 ரூபாய்.
ஸ்பீடு போஸ்ட்
உரியவரிடம் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபரிடம் தபால் சேர்க்கவும், உரியவர்கள் வீட்டில் இல்லாத பட்சத்தில், தபால் பெற உரியவரை நியமிக்காத நிலையில், ஓ.டி.பி., பெற்று தபால்களை சேர்க்கவும், தனித் தனியாக, 5 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள், இன்று அக்டோபர், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன" என்று தபால்துறை அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், பதிவு அஞ்சல் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், துரித அஞ்சல் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது..
செல்வப்பெருந்தகை
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"இந்தியாவின் அஞ்சல் துறை பல கோடி மக்களுக்கு சேவை செய்யும் துறையாகும். கடந்த நிதியாண்டில் சுமார் 2,300 கோடிக்கும் மேலாக லாபம் ஈட்டியுள்ளது. இந்நிலையில் மேலும், லாபம் ஈட்டும் நோக்கத்தோடு சமீபத்தில், மத்திய பா.ஜ.க. அரசு இந்திய அஞ்சல் துறை பதிவு அஞ்சல் (Registered Post) சேவையை நிறுத்தி, மக்கள் துரித அஞ்சல் (Speed Post) சேவையை மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இதன் மூலம், வறுமை நிலையில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்விதுறை நிர்வாகம், நிதித்துறை, வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகியோர்கள் கடிதங்கள், விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை அனுப்புவதற்கு இரட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை மத்திய பா.ஜ.க. அரசு பொதுமக்களிடமிருந்து பணத்தை பறிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறது.
பதிவு அஞ்சல் சேவை
பதிவு அஞ்சல் மற்றும் துரித அஞ்சல் இரண்டிற்கும் விநியோகம் செய்வதில் உள்ள நேரம் வேறுபாடு பெரிதாக இல்லாதபோதிலும், கட்டணங்களில் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.
பதிவு அஞ்சல் கட்டணம் சுமார் ரூபாய் 45 மட்டுமே இருந்த நிலையில், துரித அஞ்சலுக்கு ரூபாய் 85 வரை வசூலிக்கப்படுகிறது. ஒப்புதல் அட்டை கட்டணமும் ரூபாய் 3ல் இருந்து, ரூபாய் 11 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதனுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள் அதிகம்
எனவே, அஞ்சல் துறையின் இந்த முடிவு சமூகநீதிக்கும், கல்வியறிவு வளர்ச்சிக்கும் எதிரானது. இந்திய மக்களின் அடிப்படை தொடர்பு சேவையான பதிவு அஞ்சல் சேவையை நிறுத்துவது மக்கள் மீது நேரடி தாக்குதலை ஏற்படுத்துகிறது.
எனவே, மத்திய அரசும், அஞ்சல் துறையும் இந்த அநீதி முடிவை உடனடியாக ரத்து செய்து, பதிவு அஞ்சல் சேவையை மீண்டும் தொடங்கவும், துரித அஞ்சல் கட்டணங்களை குறைக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.
இது வெறும் கட்டண உயர்வு அல்ல, இது இந்தியாவின் ஏழை மக்களின் மீது சுமத்தப்படும் பொருளாதார சுரண்டல். இந்த அநீதிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டணத்தை தெரிவித்துக் கொள்கிறேன" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications