• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவின் வெல்லம் வைத்துக் கொல்லும் சதித்திட்டம் பீகாரில் முறியடிப்பு- தீக்கதிர் நாளேடு விளாசல்!

Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் வெல்லம் வைத்து கொல்லும் சதித்திட்டம் பீகாரில் முறியடிக்கப்பட்டதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள் மூக்குடைபட்டு நிற்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளேடு தலையங்கம் விமர்சித்துள்ளது.

தீக்கதிர் நாளேடு தலையங்கம்: பாஜகவின் வெல்லம் வைத்துக் கொல்லும் சதித்திட்டம் பீகாரில் சரியான நேரத்தில் முறியடிக் கப்பட்டிருக்கிறது. இதனால் மூக்குடைந்து நிற்கிறது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பரிவாரம். தேர்தலில் வாக்குகள் மூலம் மக்கள் விரும்பு கிறவர்களைத் தேர்வு செய்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் ஆட்சி புரிவதே இந்திய ஜன நாயகத்தின் அடிநாதம். ஆனால் பாசிச வெறி கொண்ட பாஜக அதனை ஏற்க மறுக்கிறது. மக்கள் தீர்ப்பிற்கு எதிராகக் குறுக்குவழியில்ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றி எதேச்சதிகாரத்தோடு ஆட்சி புரிகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய சவால். இந்திய அரசியல் சாச னத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல்.

'எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல'.. தேஜஸ்விக்கு பாஜக செய்த ரகசிய கால் - போட்டு உடைத்த நிதீஷ் கட்சி 'எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல'.. தேஜஸ்விக்கு பாஜக செய்த ரகசிய கால் - போட்டு உடைத்த நிதீஷ் கட்சி

8 ஆண்டுகளில் 11 மாநிலங்களில்.

8 ஆண்டுகளில் 11 மாநிலங்களில்.

இப்படிக் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 11 மாநி லங்களில் மக்கள் பாஜகவை நிராகரித்த போதிலும், அங்குப் பெரும்பான்மை பெற்ற கட்சிகளை உடைத்தும், குதிரை பேரத்தால் விலைக்கு வாங்கி யும் மிகக் கேவலமான முறையில் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறது. பொதுவாக பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ, அந்த கட்சியையே ஆக்டோபஸ் போன்று விழுங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜக வின் தனிப்பாணி.

பீகாரில் சேட்டை

பீகாரில் சேட்டை

அதே பாணியிலான நடவடிக்கையை 2020 பீகார் சட்டமன்ற தேர்தலிலும் மேற்கொண்டது. ஒருபுறம் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டே, அந்த கட்சிக்கு எதிராக சிராக் பாஸ்வானின் லோக் ஜன்சக்தியை களம் இறக்கி விட்டது. ஐக்கிய ஜனதாதளத்தை எதிர்த்து அனைத்து இடங்களிலும் போட்டி யிட்ட லோக் ஜன்சக்தி, பாஜகவை எதிர்த்து பெய ருக்கு 3 இடங்களில் மட்டுமே போட்டியிட்டு பாஜக வின் கூட்டுச் சதியை நிறைவேற்றியது.

மகாராஷ்டிராவில் ஷிண்டே

மகாராஷ்டிராவில் ஷிண்டே

மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் எப்படி ஏக்நாத் ஷிண்டேயை கொண்டு சிவசேனாவை உடைத்து ஆட்சியைக் கைப்பற்றியதோ அதே போன்று, பீகாரில் ஐக்கிய ஜனதாதள எம்பியாக இருந்த ஆர்.சி.பி.சிங்கை பயன்படுத்தியது. அக்கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமலே, ஒன்றிய அமைச்சராக்கி ஐக்கிய ஜனதா தளத்திற்குள் சிண்டு முடிய ஆரம்பித்தது. 2020 இல் பீகாரில் நிதிஷ்குமாரின் தோளில் அமர்ந்து வெற்றி பெற்ற பாஜக, 2022இல் உத்தரப் பிரதேச தேர்த லில் கூட்டணியிலிருந்த நிதிஷ்குமாரை எட்டி உதைத்து வெளியேற்றியது.

Recommended Video

  பீகாரைத் தொடர்ந்து புதுச்சேரி: BJPக்கு அடுத்த செக்? Politics Today With Jailany
  தனிமைப்படும் பாஜக

  தனிமைப்படும் பாஜக

  ஆனால் சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்ட ஐக்கிய ஜனதாதளம், பாஜகவின் சதியை முறியடித்து மகாபந்தன் கூட்டணியுடன் கைகோர்த்து ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தக்க வைத்தி ருக்கிறது. பாஜகவின் வெல்லம் வைத்துக் கொல்லும் திட்டத்தின் படி வீழ்த்தப்பட்ட பஞ்சா பின் அகாலிதளமும், மகாராஷ்டிராவின் சிவ சேனாவும் பாஜக கூட்டணியிலிருந்து ஏற்கனவே வெளியேறி விட்டது. தற்போது ஐக்கிய ஜனதா தளமும் வெளியேறியிருக்கிறது. மாநிலக் கட்சிக ளிடமிருந்து தனிமைப்படுத்தப்படும் பாஜக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடமிருந்தும் தனிமைப்படும். இவ்வாறு தீக்கதிர் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

  English summary
  CPI(M) Tamil daily Theekkathir has slammed BJP on Bihar Crisis.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X