கொரோனா: தமிழக மருத்துவர்கள் ரகசியமாக பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டார்களா?
சென்னை: தமிழக மருத்துவர்கள் கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலும் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

பூஸ்டர் தடுப்பூசி
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கும் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் 3-வதாக பூஸ்டர் தடுப்பூசி எப்போது அனுமதிக்கப்படும் என மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. 3வது டோஸாக பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி கோரப்பட்டும் வருகிறது.

ரகசியமாக பூஸ்டர் தடுப்பூசி?
இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவர்கள் பலர் ரகசியமாக பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சென்னை மருத்துவர் ஒருவர், சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி இதழ்கள் பலவற்றிலும் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகத்தான் இருக்கிறது என்கின்றன. ஆகையால் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாய தேவையாகிறது என கூறியிருக்கிறார்.

ஏன் பூஸ்டர் தடுப்பூசி?
இதேபோல் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி தாருங்கள் என மத்திய அரசிடம் நீண்டகாலமாக மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னமும் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. தற்போதைய சூழ்நிலையில் எங்களைப் பாதுகாத்து கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட வேண்டிய தேவை இருக்கிறது என்றும் சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளையே பூஸ்டர் தடுப்பூசியாக மருத்துவர்கள் போட்டுக் கொள்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
Recommended Video

சட்ட விரோதமாக போட கூடாது
ஒரு மருத்துவர் முதலில் கோவாக்சின் தடுப்பூசி போட்டிருந்தால் மீண்டும் அடுத்த டோஸாக அதே கோவாக்சினை எடுத்திருப்பார். அப்படியான மருத்துவர்கள் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை பூஸ்டராக போட்டுக் கொள்கின்றனர். இப்படி கொரோனா தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொள்வதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது சில மருத்துவர்களின் கருத்து. 2 டோஸ் தடுப்பூசிகள்தான் போட அனுமதிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி இல்லாத நிலையில் அதைப் போட்டுக் கொள்வது சட்டத்துக்கு எதிரானது என்றும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications