மயிலம், மேட்டூர் தொகுதியை கேட்கும் அதிமுக.. சேலம், தர்மபுரியில் செக் வைத்த அன்புமணி.. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையாததால், பாமகவுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. பாமக விரும்பும் 30 தொகுதிகளுக்கான பட்டியலை எடப்பாடி பழனிசாமி வசம் அன்புமணி அளித்துள்ளதாகவும், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தலா 2 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாகி இருக்கிறது. ஏற்கனவே பாமகவுக்கு ராஜ்ய சபா சீட் உறுதியாகிவிட்ட சூழலில், அடுத்தக் கட்டமாக தொகுதி பங்கீடு எண்ணிக்கை எப்போது நிறைவடையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பிறகும் பாஜக உடனான தொகுதி பங்கீடு இதுவரை முடிவுக்கு வரவில்லை.

பாஜக தரப்பில் சுமார் 55 தொகுதிகள் வரை கேட்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால், நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்த கூடாது என்று அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக - பாஜக இடையில் தொகுதி பங்கீடு நிறைவடையாததால், பாமகவுக்கான தொகுதிகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பாமக தரப்பில் 30 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல் எடப்பாடி பழனிசாமி வசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாமக சிட்டிங் எம்எல்ஏ-க்களின் தொகுதிகளான மயிலம் மற்றும் மேட்டூர் தொகுதிகளை அதிமுக கேட்கிறது.
மயிலம் தொகுதியில் போட்டியிட சிவி சண்முகம் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அதற்கான விருப்ப மனுவும் கொடுத்துள்ளார். இதன் காரணமாக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் கட்டாயமாக 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பாமக தரப்பில் டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications