மீண்டும் கொங்கு பகுதியில் இருந்து ராஜ்ய சபா எம்பி.. தரமான சான்ஸை தவறவிட்ட எடப்பாடி!
சென்னை: ராஜ்ய சபா தேர்தலில் கொங்கு பகுதியைச் சேர்ந்த தம்பிதுரைக்கு அதிமுக தரப்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்ய சபா பதவி அளித்திருப்பதன் மூலமாக, சட்டசபைத் தேர்தலுக்கு முன் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய சான்ஸை தவறவிட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் மைக்ரோ லெவனில் திமுக பணிகளை செய்து வருகிறது. விஜய்யின் வருகை காரணமாக சிறிய கட்சிகள், அமைப்புகளின் ஆதரவை கூட திமுக தவறவிடுவதில்லை.

அதேபோல் எந்த சமூகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது. அண்மையில் தென் மாவட்டங்களில் உள்ள ஃபெர்னான்டஸ் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் விஜய் பக்கம் செல்வதாக பேசப்பட்டது. திமுகவில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று குரல் கொடுத்து வந்தனர்.
அதனை சரி செய்யும் வகையில் ராஜ்ய சபா எம்பி வேட்பாளராக ஃபெர்னான்டஸ் சமூகத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திமுக இப்படி திட்டமிட்டு காய் நகர்த்தி வரும் சூழலில், அதிமுக மீண்டும் ஒரு தவறை செய்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மீது முக்குலத்தோர் சமூக மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
அதிமுகவில் முக்குலத்தோர் சமூகத்தினருக்கு போதிய முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிசாமி அளிப்பதில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. கொங்கு வேளாளர் கவுண்டர் மற்றும் வன்னியர் சமூகத்தினருக்கு மட்டுமே அதிமுகவில் முக்கியத்துவம் அளிப்பதாக அக்கட்சி தொண்டர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
அதனை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ராஜ்ய சபா தேர்தலில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த தம்பிதுரைக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். அதேபோல் இன்னொரு சீட்டை பாமகவுக்கு ஒதுக்கி இருக்கிறார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கொங்கு மண்டலத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தென் மாவட்டங்களில் இருந்து தனது ஆதரவாளர் ஒருவருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தால், அது முக்குலத்தோர் சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும். ஓபிஎஸ், சசிகலா, கருணாஸ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வு கூடுதல் பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications