தள்ளுவண்டி கடைகளுக்கு FSSAI சான்றிதழ் கட்டாயம்! தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. FSSAI உரிமம் இல்லாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் முறையாக உரிமம் பெற உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. FSSAI சான்றிதழ் பெறாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Food Safety Dept Announces Mandatory FSSAI for Pushcart Food Shops

ஆன்லைன், இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவுத் தரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை விற்பனையாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், தள்ளுவண்டிக் கடை விற்பனையாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா என்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+