தமிழக அரசின் “சிக்சர்”.. ரூ.38 கோடி ஒதுக்கீடு! ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் செம குஷி!
சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 18 மாதங்களாக, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன் வழங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பென்ஷன் பெறும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் அவ்வப்போது தங்களது பணப்பலன் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுவதும், இதற்கு அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக தீர்வு காண்பதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.
இதில் 50 சதவீத வருங்கால வைப்புத் தொகை உட்பட பணப்பலனின் ஒரு பகுதியை வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதத்தை பரிசீலித்து ரூ.38.73 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் போக்குவரத்துக் கழக்கத்துக்கு ரூ.5.8 கோடி, சேலம் ரூ.3.6 கோடி, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.4.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் ரூ.8 கோடி, மதுரை – ரூ.3.2 கோடி, நெல்லை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.2.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடும் கோபத்தில் இருக்காங்க! 'அதை’ மட்டும் செய்ய வச்சுராதீங்க.. அட்டாக்கை ஆரம்பித்த பாஜக அண்ணாமலை!
இதைத்தொடர்ந்து, கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும், போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் என போக்குவரத்து ஓய்வூதியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27 -ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகளுடன் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications