அரசு பஸ்களில் அல்டிமேட்.. கிளம்பி ஓடப்போகும் 1666 புதிய பஸ்கள்.. எப்போ தெரியுமா? சூப்பர் ஏற்பாடுகள்
சென்னை: 1666 பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அசோக் லேலண்ட் நிறுவனத்துடன், தமிழக அரசு மேற்கொள்ள நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.

பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேபருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்றுமுன்தினம்கூட, புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தார்.. அதன்படி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, 371.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகம்: போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (விழுப்புரம் - 344, சேலம் - 84, கோயம்புத்தூர் - 263, கும்பகோணம் - 367, மதுரை - 350, திருநெல்வேலி - 242) என நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகளுக்கு 1,650 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்யப்படும்.
மேலும் மலைவாழ் மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து (கோயம்புத்தூர்) கழகத்திற்கு பிரத்யேகமாக 16 அடிச்சட்டங்கள் வாங்கப்படும். மொத்தமாக 1,666 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவை நாட்டிலேயே முதன்மையான நிலைக்கு உயரும்" என்று கூறியிருந்தார்.
டெண்டர்கள்: அதாவது, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 2019 - 2020ம் நிதியாண்டுக்கு பிறகு, புதிய பஸ்கள் எதுவுமே வாங்கப்படவில்லை. கடந்த 2022ல், 1,107 புதிய பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வெளியானது..
ஆனால், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் கேட்டு, கோர்ட்டில் அது தொடர்பான வழக்கு நடந்துவந்ததால் தாமதம் ஏற்பட்டது... சமீபத்தில்தான், இந்த வழக்கில் தீர்வு ஏற்பட்டது.. அதனால்தான். 4,300 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளதாம்.. இந்த பஸ்கள், 3 கட்டமாக, பயன்பாட்டுக்கு வரப்போவதாக சொல்கிறார்கள். அந்தவகையில்தான், முதல் கட்டமாக 1,666 புதிய பஸ்களுக்கு, 371, 16 கோடி ரூபாயில் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்ய அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு ஆணை வழங்கப்பட்டு உள்ளதாம்.
புதிய பஸ்கள்: இந்த புதிய பஸ்கள், இன்னும் 6 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்கிறார்கள்.. இந்த பஸ்கள் வந்ததுமே, பழைய பஸ்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்நிலையில் அசோக் லேலண்ட் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.. அதாவது, 1,666 புதிய பஸ்களை வாங்குவதற்கான ஆர்டரை தமிழக அரசு போக்குவரத்து துறை வழங்கியிருக்கிறது..
கனத்த நம்பிக்கை: இவ்வளவு பஸ்களை மொத்தமாக ஆர்டர் கொடுப்பது இதுதான் முதல்முறை.. இதன்மூலம் பஸ்கள் தயாரிக்கும் துறையில் தங்களின் ஆதிக்கம் தொடரும்.. பயணிகளின் பாதுகாப்பு, சொகுசு வசதிகள் போன்றவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன... அதனால், புதிய ஆர்டரை போதிய சிறப்பம்சங்களுடன் உரிய நேரத்தில் தமிழக அரசிடம் ஒப்படைப்போம் என்று அசோக் லேலண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications