அரிசி குடும்ப அட்டைதாரர்களே.. இந்த நாளில் ரேஷன் கடைகள் இயங்காது.. உங்க ஆதார் கார்டு வேலை முடிஞ்சதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இது தொடர்பான சுற்றறிக்கையும், ரேஷன் கார்டுதார்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.

TN Government civil supplies and Today vinayagar chaturthi 18 day holiday for ration shops

தற்போது பண்டிகை காலம் துவங்கிவிட்டதால், ரேஷன் கடைகள் எப்போது திறந்திருக்கும் என பொதுமக்களுக்கு சரியாக தெரிவதில்லை... எனவே, பொருள்கள் வாங்க கடைகளுக்கு சென்று விட்டு, பிறகு ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி விடுகிறார்கள்..

விடுமுறை: அதனால்தான், உணவுப் பொருள்கள் வழங்கல் துறை சார்பில் விடுமுறை குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்படுகிறது... அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று செப்டம்பர் 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டியே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. ஆனால், இதற்கு பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, பொதுவிடுமுறையை செப்டம்பர் 18ம் தேதிக்கு அதாவது இன்றைய தேதிக்கு மாற்றப்பட்டது.

சுற்றறிக்கை: அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளும் 18ம் தேதி இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்தது. இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உள்ளதாவது:

விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் செப்டம்பா் 18-ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் பொது விடுமுறைப் பட்டியலில் விநாயகா் சதுா்த்தி பண்டிக்கைக்கான விடுமுறையானது, செப்டம்பா் 17-ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதியை செப்டம்பா் 18-ஆக மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும்படி உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது.

அப்டேட்: இதனிடையே, ஆதார் கார்டில் ஏதேனும் அப்டேட் இருந்தால் அதை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆதார் அமைப்பு (UIDAI) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து X தளத்திலும் ஆதார் அமைப்பு பதிவிட்டிருக்கிறது. அதில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றும், அதை அப்டேட் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

முன்பெல்லாம், ஆதார் சேவை மையத்துக்கு சென்று ஆதார் கார்டில் ஏதேனும் அப்டேட் செய்வதாக இருந்தால் அதற்கு 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இது பலருக்கும் சிரமமாக இருந்தது.. ஆனால், ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்ய ஆதார் அமைப்பு சலுகை வழங்கியது.

டைம் நீட்டிப்பு: முதலில் செப்டம்பர் 14 வரை வீட்டிலேயே ஆன்லைன் ஆதார் அப்டேட் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு பிறகு, இந்த சலுகை இந்த ஆண்டின் டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+