"டுவிஸ்ட்” - நம்பிய ஓபிஎஸ்.. நச்சுன்னு சொன்ன ஸ்டாலின்! யாரு “சைடும்” இல்லை - பழனிசாமிக்கு ஆறுதல்
சென்னை: அதிமுகவில் மோதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஓ.பி.எஸ்., சசிகலா தரப்புக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில், நாங்கள் எந்த பக்கமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11 ஆம் தேதி பொதுக்கூட்டம் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார்.
ஜூலை 23 க்கு முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

பழைய பதவிகள்
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போனது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்கின்றனர்.

எடப்பாடிக்கு ஸ்கெட்ச்
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அதிமுகவை சேர்ந்த இளங்கோவனிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்தது. இதுமட்டுமின்றி எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு குறிவைப்பதாக பேசப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை
அதேநேரம் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என முதலைமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது போன்றவற்றை வைத்து அவருக்கு சாதகமாக அரசு இருப்பதாகவும் கூறப்பட்டன. தற்போது சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் இணைவது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைபடி சசிகலாவிடம் விசாரணை நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஓபிஎஸ் தர்ம யுத்தம்
இதை வைத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அரசு சாதகமாக இருப்பதாக பேசப்பட்டு வந்த தகவலில் உண்மை இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஆவியோடு பேசுகிறேன் என்று தியானம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரே கூறினார்.

நடவடிக்கை எடுப்போம்
எனவே ஒரு ஒப்புக்காக ஒரு கமிஷனை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. அதனை தற்போது நான் கூறவில்லை சட்டமன்றத்திற்கு அது வரும். சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து சட்டமன்றத்தின் மூலமாகவே முறையான நடவடிக்கையை எடுப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
மேலும் தூத்துக்குடி சம்பவமும் கடந்த ஆட்சியில் தான் நடந்தது அன்றைய முதல்வர் அதனை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறினார். அந்த அறிக்கையும் சட்டமன்றத்தில் வைக்க உள்ளோம். இன்றைக்கு ஈபிஎஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி வருகிறார் ஆனால் அதனை நிறைவேற்றி வருவதற்கான எடுத்துக்காட்டுகளாக தான் நான் இதனை கூறியுள்ளேன்." என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications