"ஸ்கெட்ச்" எடப்பாடிக்கு மட்டுமில்ல.. ஸ்டாலின் வைத்த "டுவிஸ்ட்"! அதிர்ச்சியில் உறைந்த சசி, பன்னீர்
சென்னை: அதிமுகவில் மோதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடப்பாடிக்கு எதிராகவும் ஓ.பி.எஸ்., சசிகலா தரப்புக்கு ஆதரவாகவும் செயல்படுவதைபோல் செய்திகள் வெளியான நிலையில் அரசு தற்போது எடுத்துள்ள முடிவு கணிப்புகள் அனைத்தையும் தகர்த்துள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. இதனை தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது.

உத்தரவு
ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23 க்கு முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போனது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்கின்றனர்.

எடப்பாடிக்கு ஸ்கெட்ச்
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான முக்கிய தலைகள் பெயர்களும் அடிபட்டன. குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அதிமுகவை சேர்ந்த இளங்கோவனிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்தது. இதுமட்டுமின்றி எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு ஸ்கெட்ச் போட்டிருப்பதாக பேசப்பட்டது.

அதிர்ச்சியில் சசிகலா, ஓபிஎஸ்
அதேநேரம் ஓ.பன்னீர்செல்வதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என முதலைமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது போன்றவற்றை வைத்து அவருக்கு சாதகமாக அரசு இருப்பதாகவும் கூறப்பட்டன. தற்போது சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் இணைவது உறுதியாகி இருக்கும் நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைபடி சசிகலாவிடம் விசாரணை நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அரசு சாதகமாக இருப்பதாக பேசப்பட்டு வந்த தகவல் பொய்யாகியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications