Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் அட்டைதாரர்களே.. டோன்ட் வொர்ரி! துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல்.. டெண்டர் கோரியது தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிப்பதற்காக துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை விரைவாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 40,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்து டெண்டர் கோரியுள்ளது.

ration shop tamil nadu palm oil

ரேஷன் கடைகள்: தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அரிசியை இலவசமாகவும், சர்க்கரை, உப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மானியத்தில் குறைந்த விலையில் அளிக்கிறது.

தமிழக அரசு டெண்டர்: இந்நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரி உள்ளது. பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வரும் 27 ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, 2 கோடி பாமாயில் பாக்கெட்கள், தேவையான துவரம்பருப்பு ஆர்டர் செய்யப்பட்டு, அனைத்தும் நியாயவிலை கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தடையின்றி விநியோகம்: பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இந்த மாதம் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றனர்.

தற்போது, ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் தடையின்றி விநியோகிக்கும் வகையில், கொள்முதல் செய்ய டெண்டர் கோரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தற்போது துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை தேவையான அளவில் இருப்பில் வைத்து கொள்ளும் அளவிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், பாமாயில் மற்றும் துவரம்பருப்பு வழங்குவதை நிறுத்துவதற்கு தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை என தமிழ்நாடு உணவு வழங்கல் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

விலை உயர்வு?: கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பருப்பு, பாமாயில் ஆகியவையும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது முதலே பருப்பு கிலோ ரூ.30க்கும், பாமாயில் லிட்டர் ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 2007ல் வெளிச்சந்தையில் இந்த பொருட்கள் விற்றதை விட இப்போது பன்மடங்கு விலை அதிகரித்துள்ளது.

ஆனால் ரேஷன் கடைகளில் தற்போதும் பழைய விலைக்கே இந்த பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இதற்கான மானியத்தை அரசு அதிகரித்து வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் பருப்பு மற்றும் பாமாயிலின் விலை சிறிது உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+