இனி சரிப்பட்டு வராது.. ஆக்சனில் இறங்கும் தமிழ்நாடு! காவிரி பிரச்சனை - உச்சநீதிமன்றத்தை நாட முடிவு
சென்னை: தமிழ்நாட்டுக்கு 15 நாட்களில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், இந்த நீரின் அளவு குறைவு என்பதால் உச்சநீதிமன்றத்தை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் கடந்த முறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 38 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி வலியுறுத்தியது. ஆனால், காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு அதிகாரிகளோ தண்ணீரை திறக்க மறுத்தனர்.

போதிய நீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்கள், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கர்நாடகா காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரில் 41 டி.எம்.சி பாக்கியை வைத்து இருக்கிறது. இந்த மாதத்தில் மீதம் உள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 டி.எம்.சி வீதம் 24 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.
ஆகஸ்ட் இறுதி வரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 65 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டி இருந்தது. தமிழ்நாடு அரசின் தொடர் அழுத்தங்களுக்கு பிறகு 10 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்தார். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்ததை அடுத்து. தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனி அமர்வு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "புதிதாக தனி அமர்வு அமைப்போம்." என தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டுக்கு 15 நாட்களில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு அரசும் கர்நாடக அரசும் ஏற்கவில்லை. 5 ஆயிரம் கன அடி நீர் என்பது குறைவு என தமிழ்நாடு அரசு வாதிட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications