பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்? முதல்நபராக ஓடோடி வந்த ஜவாஹிருல்லா.. தமிழக அரசு சர்ப்ரைஸ் சொல்லுதா
சென்னை: மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். இது மாணவர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்பி தேர்தல் வருவதால், அதனை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது.
கல்வித்துறை: இதனிடையே, 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு முன்கூட்டியே, அதாவது ஏப்ரல் 2 முதல் 12ம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 12 வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஏப்ரல் 2ம் தேதி மொழித் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 3ம் தேதி ஆங்கில பாடத்துக்கான ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 5ம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது.
மாணவர்கள்: ஏப்ரல் 12ம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கானதேர்வும், ஏப்ரல் 8ம் தேதி சிறுபான்மையின மாணவர்களுக்கான மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.2 முதல் 12ம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
குறிப்பாக ஏப்ரல் 2ம் தேதி மொழித் தேர்வு மொழித் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 3ம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 4ம் தேதி உடற்கல்வி பாடத்துக்கான தேர்வு
அறிவியல் பாடம்: தேர்வு நடைபெற உள்ளது.தொடர்ந்து மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி கணிதத்துக்கும், ஏப்ரல் 8ம் தேதி விருப்பப் பாடத்துக்கும் தேர்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 10ம் தேதி அறிவியல் பாடத்துக்கும் தேர்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 10ம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜவாஹிருல்லா: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல், 10-ந்தேதி அறிவியல் தேர்வும், 12-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11-ந்தேதி ஈகைப் பெரு நாள்(ரம்ஜான்) விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதால் அன்று மட்டும் தேர்வுகளை நடத்தாமல் அதற்கு முந்தைய தினமும் பிந்தைய தினமும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பெருநாட்கள் இரண்டும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.
மன அழுத்தம்: நமது நாட்டில் பெரும்பாலும் வட பகுதியில் ஒருநாளும், தென்பகுதியில் மற்றொரு நாளும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் சூழலில் ஏப்ரல் 10-ந்தேதி அன்றும் 12-ந் தேதி அன்றும் தேர்வுகளை எழுதுவது என்பது முஸ்லிம் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும்.
எனவே ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனித நேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.. ஜவாஹிருல்லாவின் இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கும் என்றே நம்பப்படுகிறது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications