வேகமாக பரவும் ஓமிக்ரான்.. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை?
சென்னை: ஓமிக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மே , ஜூன் மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா 2ஆவது அலையை தமிழக சுகாதாரத் துறை உள்பட கொரோனா முன்களப் பணியாளர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் 3ஆவது அலை வந்தாலும் தமிழகம் தயார் நிலையில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. அவ்வாறிருக்கும் போது கடந்த மாதம் 24 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் வேரியண்ட் பரவி வந்தது. இதனால் அந்த நாட்டில் கொரோனா 4ஆவது அலை உருவானது.

டெல்டா
இந்த ஓமிக்ரான் டெல்டாவை விட வீரியமிக்கது என்பதால் அதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டின. விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டிசம்பர் 2
எனினும் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் இருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்ளில் ஓமிக்ரான் பாதிப்பு இருந்தது. இதையடுத்து நேற்றைய தினம் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

புதுவை
தென்னிந்தியாவில் தமிழகம், புதுவையை தவிர்த்து முக்கிய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் நுழைந்துவிட்டது. இது கடும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் வீரியமிக்கதாக இருப்பதால் அச்சம் எழுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை மறுநாளுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது.
Recommended Video

தடை விதிக்க வாய்ப்பு?
இதையடுத்து அண்டை மாநிலங்களில் ஓமிக்ரான் பரவி வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அந்த வகையில் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டு பிறப்பையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கூட்டம் கூடக் கூடாது என அறிவிக்கப்பட்டது. அது போல் இந்த ஆண்டும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications