கர்ப்பிணிக்கு ரூ.5000 நிதியுதவி.. தமிழக அரசின் புதிய திட்டம்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் உதவும் வகையில் கர்ப்பிணி தாய் மார்களுக்கான நிதியுதவி திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டப்படி கர்ப்பிணிகளுக்கு 5000 உதவி தொகை கிடைக்கும். இந்த திட்டம் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறிய தகவல்களை பார்ப்போம்.

TN governments new plan to provide 5000 financial assistance to pregnant women: Minister Ma Subramanian explain

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதிதாக குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் உதவும் வகையில் கர்ப்பிணி தாய் மார்களுக்கான நிதியுதவி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைச்சர் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5,694 பெண்களுக்கு ரூ.50 லட்சம் நிதி உதவியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அமைச்சர் மாசுப்பிரமணியன் இதுபற்றி பேசுகையில், குழந்தைகளின் முதல் 1000 நாட்கள் உதவும் வகையில் கர்ப்பிணி தாய் மார்களுக்கான நிதியுதவி திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்முறையாக தொடங்கி வைத்துள்ளோம். 5294 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் 3 தவணை வழங்கப்படுகிறது-

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் மருத்துவ குறியீடுகள் கணக்கிடப்பட்டது.இதில் 14 மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ரத்தசோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளனர். குறிப்பாக இந்த 14 மாவட்டங்களில் 23 வட்டாரங்களில் உள்ள 118 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு ஒரு வருடத்தில் 37 ஆயிரத்து 200 குழந்தைகள் பிறந்துள்ளனர். 2 வருடங்களுக்கு 74 ஆயிரத்து 400 குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்திற்காக கர்ப்பம் தரித்த உடன் முதல் தவணையாக 20, 28, 38-வது வாரங்களில் ரூ.1000, 6-வது மாதம் 4ம் தவணை ரூ.500 24வது மாதம் 7-வது தவணை ரூ.500 என மொத்தமாக கர்ப்ப காலத்தில் ரூ.3000, 2 வயது வரை குழந்தை வளரும் பருவத்தில் ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

குழந்தை இறப்பு விகிதத்தில் இந்தியாவில் ஆயிரத்திற்கு 28, தமிழ்நாடு அளவில் ஆயிரத்திற்கு 13, மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சத்திற்கு 97, தமிழ்நாடு அளவில் ஒரு லட்சத்திற்கு 54 என்ற விகிதத்தில் இருக்கிறது. இதனை மேலும் குறைத்திடும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார். இதற்காக ரூ.38.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்

இத்திட்டத்தின் மூலம் கர்ப்ப கால ரத்த சோகை தடுக்கப்படும். அதே போன்று பேறுகால குழந்தைகள் எடை சீரானதாக இருக்கும். 2 வருடத்திற்கான குழந்தை வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்படும். அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படும். எடை குறைவான குழந்தைகள் பிறப்பதை முற்றிலுமாக தவிர்த்திட முடியும். கர்ப்ப கால பிரச்சினைகளை மேம்படுத்த முடியும்.

TN governments new plan to provide 5000 financial assistance to pregnant women: Minister Ma Subramanian explain

அனைத்து தாய் சேய் நல குறியீடுகளை மேம்படுத்துதல், பிரச்சினைகள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களை காப்பாற்றிடலாம். இந்த பணத்தை தாய்மார்களின் ஊட்டச்சத்தையும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் மேம்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுவரை 8,163 தாய் மார்கள் இத்திட்டம் மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள். இன்று 5,294 தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.1000க்கான நிதி உதிவி வழங்கப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+