Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் 5 நாள் தான்.. என்ன முடிவு? அவசரமாக டெல்லி பறக்கும் ஆளுநர் ரவி.. ஒப்புதல் அளிக்க திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காத சூழலில், அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இப்படியான சூழலில் ஆளுநரின் டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த மசோதாக்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார். இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தனர்.

TN Governor rn ravi leaves for delhi amid key case come to hearing in 5 days

இதற்கிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு தான் ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத மசோதாக்களை மீண்டும் கடந்த நவம்பர் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்பி வைத்தது.

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் தல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல, இந்த சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் அனுமதிக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு அனுமதி அளித்திட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மாலையிலேயே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆளுநர் கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விஷயத்தில் தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது.

கடந்த 20ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் 3 வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார் என சரமாரி கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. இந்த வழக்கு வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எனினும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. உச்ச நீதிமன்றம் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ள நிலையில், ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தெரிவித்தார்.

மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும்போது அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு vs ஆளுநர் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை, ஆளுநர் தடுக்க முடியாது என்றும், ஆளுநர் என்பது அடையாள பதவிதான் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு விசாரணைக்கு வர 5 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்ற கேள்வி தீவிரமாக எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டுள்ளார் ஆளுநர் ரவி. அவருடன் ஆளுநரின் செயலாளர், உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் செல்கின்றனர். ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி செல்லும் ஆளுநர் அங்கு, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வார இறுதியிலும், ஆளுநர் ரவி டெல்லி சென்றுவிட்டு அடுத்த நாள் திரும்பினார். இந்நிலையில், மசோதா விவகாரம் பற்றி எரியும் சூழலில் மீண்டும் அவசர டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+