“ஆளுநரே சொல்லிட்டாரு.. 356வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை கலையுங்க..” ஜெயக்குமார் பரபர பேட்டி!
சென்னை : தமிழ்நாட்டின் முதல் குடிமகனான ஆளுநர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியுள்ளார். கருத்து தெரிவிப்பதோடு நிற்காமல் 356ஐ பயன்படுத்தி ஆட்சியை ஆளுநர் கலைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு ஆளுநர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை அறிந்திருந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். நான் தமிழக மக்களுக்கு உண்மையை மட்டுமே உரைப்பேன் என்று உறுதிமொழி எடுத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறை, கோவையில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களை சுட்டிகாட்டி பேசியிருந்தார்.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளுநர் கூறிய கருத்து குறித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறியிருப்பது தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எதிர்கட்சி சொன்னால் கூட பரவாயில்லை, ஆளுநரே சொல்லியுள்ளார். எனவே 356ஐ பயன்படுத்தி ஆட்சியை ஆளுநர் கலைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் அளித்துள்ள பேட்டியில், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக கஞ்சா, பிரவுன் சுகர், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. போதைப் பொருட்களை அளித்து, சட்ட விரோதமான செயல்களை செய்து வருகின்ற விடியாத அரசாங்கமாக திமுக அரசு இருக்கிறது. திமுக ஆட்சியில் போதையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. இதனால் வணிகர்கள் முதல் அனைத்து தரப்பினரும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
போதைப் பொருட்கள் புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீராக்கப்பட வேண்டும். அது இந்த ஆட்சியில் நடக்கப் போவதில்லை. ஸ்டாலின் நிர்வாகத் திறன் அற்றவர். என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு முதலமைச்சராக அவர் இருக்கிறார். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த ஆட்சியில் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதை கட்டுப்படுத்தவும் இந்த அரசாங்கம் முன்வராமல் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக அனைத்து அமைச்சர்களும் மாற்றப்பட வேண்டும் முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டும். விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத சூழ்நிலை, மின்சார கட்டணம், வீட்டு வரி, பால் விலை உயர்வு எல்லா மக்களும் கஷ்டப்படும் சூழ்நிலையில், இந்த அரசு வீட்டிற்குச் சென்றால் நல்லது என்று தான் தமிழ்நாட்டு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிட மாடல் என்று கூறி திமுக திராவக மாடல் ஆட்சியைத்தான் செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் எல்லோரும் சமம் என்று அடிப்படையில் மக்கள் நடத்தப்பட்டார்கள்; ஆனால் இந்த திராவிட மாடல் ஆட்சியில் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து குற்றம் செய்தவர்களை இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கிறார்கள்.இதேபோன்று சமத்துவம் இல்லாத ஆட்சியை நடத்தும் இவர்களுக்கு திராவிட மாடல் என் கூறிக்கொள்ள தகுதி கிடையாது.
நீட் போன்ற தமிழ்நாட்டிற்குத் தேவையில்லாத விஷயங்களுக்கு எதிரான மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும். கூட்டுறவு சங்க பதவிகாலத்தை ஐந்து வருடத்தில் இருந்து மூன்று வருடம் ஆக குறைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சியை பழிவாங்க வேண்டும் என்ற அடிப்படையில் உள்ள மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிப்பது பற்றி கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஆனால் நல்ல விஷயங்களுக்காக கொண்டுவந்த மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும்.
ஆளுநர் என்பவர் இந்த தமிழ்நாட்டின் முதல் குடிமகன். அவர் இந்த தமிழ்நாட்டின் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார். சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சி சொன்னால் கூட பரவாயில்லை, ஆளுநரே கூறுகிறார். பாகிஸ்தானில் இருந்து சர்வசாதாரணமாக ஆயுதங்களும் போதைப் பொருட்களும் தமிழ்நாட்டுக்குள் வருகிறது என்று ஆளுநர் கூறுகிறார். இதை சுலபமாக விட முடியுமா?
தீவிரவாதம் பற்றி ஒரு குற்றச்சாட்டை ஆளுநர் வைக்கும்போது இதை சொல்வதோடு ஆளுநர் நிறுத்தாமல் மத்திய அரசின் 356-வது பிரிவை இந்த ஆட்சியை கலைப்பதற்கு ஆளுநர் பயன்படுத்த வேண்டும். இதை ஆளுநர் பரிந்துரை செய்தால் மட்டுமே உண்மையிலேயே ஆளுநர் தன்னுடைய வேலையை செய்கிறார் என்று நாங்கள் நம்புவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்.. அப்செட்டில் இருந்த நயினார் நாகேந்திரன்! நம்பிக்கையாக சொன்ன எடப்பாடி -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன்











Click it and Unblock the Notifications