சிறந்த பத்திரிகையாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல் விருது- பேராசிரியர் அருணன் தலைமையில் தேர்வு குழு!
சென்னை: சிறந்த பத்திரிகையாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வு குழு பேராசிரியர் அருணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டசபை கூட்டத் தொடரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

செய்தித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும் விளிம்பு நிலை மக்கள் மேம்பாட்டுக்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கான தகுதிகள், வரையறை வகுத்தும் ஒவ்வோர் ஆண்டும் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3-ல் இவ்விருது வழங்கப்படும். விருதாளருக்கு விருதுத் தொகையான ரூ5 லட்சம் உடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதியான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விருதாளரை தேர்வு செய்ய பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது. குழுவின் தலைவர் பேராசிரியர் அருணன்; உறுப்பினர் செயலாளர் - கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு), உறுப்பினர்கள்: மூத்த பத்திரிகையாளர்கள் ஜென்ராம், சமஸ், தராசு ஷியாம், முனைவர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் அரங்க மல்லிகா. இக்குழுவின் பதவிக் காலம் 3 ஆண்டுகள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வுக் குழு மாற்றி அமைக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications