சென்னை, கோவை, மதுரைக்கு வரும் சூப்பர் பஸ்கள்.. 500 மின்சார சொகுசு பேருந்துகள் வாங்க டெண்டர்!
சென்னை: புதிதாக 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தற்போது கோவை, மதுரை நகரங்களிலும் மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாதது, குளிர்சாதன வசதி உள்ளது என்று இரு வகையாக பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. ஏற்கனவே சென்னை மாநகரில் 500 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
500 தாழ்தள மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான டெண்டர் விண்ணப்பத்தை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை டெண்டர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2022-23 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதேபோல 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.154 கோடி ஒதுக்கப்பட்டு, 910 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

தொடர்ந்து 2023-24 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 888 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 112 பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதேபோல 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.76.34 கோடி ஒதுக்கப்பட்டு 154 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications