108ஐ தொடர்பு கொள்ள முடியாவிட்டால்.. 044-40067108.. இந்த எண்ணை அழைக்கலாம்.. தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அளிப்பதற்காக புதிய கட்டுப்பாட்டு அறையும் தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    108ஐ தொடர்பு கொள்ள முடியாவிட்டால்..இந்த எண்ணை அழைக்கலாம்.. தமிழக அரசு

    தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1685 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,914ஆக உயர்ந்துள்ளது.

     TN Govt give new helpline for 108 services in Chennai for Covid-19 Patients

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து நிலையில் 108 ஆம்புலன்ஸ் உதவி எண்ணுக்கு நிறைய அழைப்புகள் வருகிறது. ஒரு பக்கம் கொரோனா உள்ளவர்கள், அறிகுறி உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் எண்ணை அழைக்கிறார்கள். இன்னொரு பக்கம் மற்ற நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் எண்ணை அழைக்கிறார்கள்.

    அதாவது விபத்து, திடீர் மாரடைப்பு, பிரசவம் என்று பலர் இப்படி வேறு வேறு காரணங்களுக்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கிறார்கள். இதனால் 108 சேவை மையத்தில் வேலை பளு மிக அதிகம் ஆகியுள்ளது. தமிழகத்தில் 108 அவசரகால ஊர்தி சேவை 24 மணி நேரமும் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

    ஆனாலும் அதிக அளவில் அழைப்புகள் வருவதால் சில அழைப்புகளை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் நிலை உண்டாகி உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அதன்படி தமிழகத்தில் கொரோனா உள்ளவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை அளிப்பதற்காக பிரத்யோக கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் கொரோனா நோய் தொற்று தொடர்பாக ஆம்புலன்ஸ் சேவைக்கு 0444006 7108 என்ற எண்ணை தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் உங்கள் இடத்திற்கு அனுப்பப்படும். இந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் செயல்பட்டு வருகிறது.

    108 எண்ணுக்கு தொடர்பு கொள்வதற்கு பதிலாக கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் 0444006 7108 எண்ணுக்கு தொடர்பு கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியும். இன்னொரு பக்கம் 108 சேவை எப்போதும் போல செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+