சென்னை மட்டுமல்ல.. இனி எல்லா நகரங்களுக்கும் அறிமுகமாகும் சூப்பர் திட்டம்.. அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை போல் அனைத்து நகரங்களிலும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை தரப்படும் என்றும் அல்லது 5 ஆயிரம்ரூ பாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்காக நகர்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
பொதுவாக தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும். தாமதமாக செலுத்தினால் எந்தவித அபராதமும் விதிக்க முடியாத நிலையே இருந்தது.

அதற்கான சட்ட வழிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கும் தமிழகத்திலேயே பெரிய மாநகராட்சியான சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ரூ.350 கோடிக்கு மேல் சொத்துவரி நிலுவை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக முதல் 15 நாட்களுக்குள் வரியை செலுத்தினால் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற சலுகையை சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. இதனால் சொத்து வரி வசூல் அதிகரித்ததுடன், மக்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து சென்னையை போல் அனைத்து ஊர்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் (1998) உள்ள விதிகளில் கடந்த ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி "தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் அனைத்திலும், ஒவ்வொரு அரையாண்டின் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்று புதிய திருத்தத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விதிகள் ஏப்ரல் 13 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் ஏப்ரல் 15ம் தேதி வரை சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம் என்று இருந்த நிலையில் இப்போது ஏப்ரல் 30-ம் தேதி வரை சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது,

தமிழகத்தில் உள்ள இதர 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது, தற்போது மேற்கொள்ளப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி சட்ட திருத்தத்தின்படி, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் ஏப்ரல்,அக்டோபர் மாதங்களில் 30-ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரிகளுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications