தமிழகத்தில் அரசு, தனியார் பஸ்களில் இனி ஏ.சி. பயன்படுத்தலாம் ... ஆனால் சில கட்டுப்பாடுகள்!
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
Recommended Video

2020 மார்ச் 25 முதல் 702 ஏ.சி. அரசு பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந்தியாவின் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் படிப்படியாக தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.

ஏசியினால் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக கூறியதால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் முதலில் ஏசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதேபோல் பஸ்களில் ஏசியை பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.ஏற்கனவே, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்குட்பட்டு ஏசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
* கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் ஏ.சி. வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
* பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கும் ஏ.சி. வசதியுடன் பேருந்துகளை இயக்கலாம்.
* 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* 2020 மார்ச் 25 முதல் 702 ஏ.சி. அரசு பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications