தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை... சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை- ஜனவரியில் மசோதா தாக்கல்?
சென்னை: தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை அமைப்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரின் போது சட்ட மேலவைக்கான மசோதா தாக்கல் செய்யப்படக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
இந்தியாவில் தற்போது 6 மாநிலங்களில்தான் சட்ட மேலவை நடைமுறையில் உள்ளது. 1986-ம் ஆண்டு தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோதுதான் சட்ட மேலவை கலைக்கப்பட்டது.

மேலவையில் தலைவர்கள்
தமிழகத்தின் முதுபெரும் தலைவரான முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் சட்ட மேலவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். சட்ட மேலவையில் தமிழ்ச் சான்றோர்கள் பலரும் உறுப்பினர்களாக இருந்தனர். தமிழக சட்ட மேலவை கலைக்கப்பட்டதன் ஒரு வரலாறு உண்டு.

மேலவை கலைப்பும் வெண்ணிற ஆடை நிர்மலாவும்
1986-ல் எம்.ஜி.ஆர். தம்முடன் திரைப்படங்களில் நடித்த வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவை உறுப்பினராக்க முடிவு செய்தார். ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலா பதவியேற்புக்கு முன்பு, தம்மை திவால் ஆனவர் என அறிவித்திருந்தார். அப்படி திவாலான நபர்கள், மேலவை உறுப்பினராக முடியாது எனக் கூறி ஒரு வழக்கு தொடரப்பட்டது. அப்போது அதிமுக நிதியில் இருந்து ரூ.4.65 லட்சத்தைக் கொடுத்து வெண்ணிற ஆடை நிர்மலாவின் திவால் சூழ்நிலையை மாற்ற முயன்றார் எம்ஜிஆர். இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம், வெண்ணிற ஆடை நிர்மலா திவால் ஆனவர் அல்ல என தீர்ப்பளித்தது. வெண்ணிற ஆடை நிர்மலா தமது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அப்போதைய ஆளுநர் குரானா, திவாலான நபரை எப்படி சட்ட மேலவை உறுப்பினராக்குவது என எம்ஜிஆரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து சட்ட மேலவையையே கலைத்தார் எம்.ஜி.ஆர்.

திமுக அரசுகள் முயற்சி
1989, 1996, 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் மேலவைகள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டன. 2011-ன் இறுதியில் மேலவை சட்டப்படியாக உருவாகும் நிலை இருந்தது. ஆனால் தேர்தலில் வென்ற ஜெயலலிதா, இந்த முயற்சியை கைவிட்டார். அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் மேலவையை கொண்டுவருவோம் என திமுக உறுதியளித்திருந்தது. முடிவடைந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் மேலவையை கொண்டு வருவோம் என சட்டசபையில் திமுக அரசு உறுதி தந்தது.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை
இதனடிப்படையில் தற்போது சட்ட மேலவையை கொண்டு வருவது தொடர்பாக திமுக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் இதற்கான மசோதா கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications