ஆந்திரா பாணி.... இனி டாஸ்மாக் மதுகடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டும் திறப்பு!
சென்னை: தமிழகத்தில் இனி டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன.

புதிய கட்டுப்பாடுகள்
இதனால் தமிழகத்தில் நாளை முதல் பெரும்பாலான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய மளிகை உள்ளிட்ட கடைகள் பகல் 12 மணிவரை மட்டும் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகள் மூட கோரி வழக்கு
ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு புதிதாக எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. தற்போது இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்து வைக்கப்படுகின்றன. இதனை எதிர்த்து டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தி வழக்குகள் தொடரப்பட்டன.

நேரம் குறைப்பு- அறிவிப்பு
இந்த வழக்கு விசாரணையின் போது டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்கப் போவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதனடிப்படையில் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே டாஸ்மாக் கடைகளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆந்திராவை போல் அமல்
ஏற்கனவே ஆந்திராவில் இதேபோல் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரைதான் மதுபான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையே தமிழக அரசும் பின்பற்றி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications