6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்! வடக்கு மண்டல ஐ.ஜி.யாக கண்ணன் ஐ.பி.எஸ்.நியமனம்!
சென்னை: தமிழக காவல்துறையில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை திடீர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி.
ஆயுதப்படை பிரிவு ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் ஐ.பி.எஸ். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த தேன்மொழி ஐ.பி.எஸ். சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக இருந்த பிரதீப் ஐ.பி.எஸ். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் சிறப்பு படை பட்டாலியன் எஸ்.பி.க்களாக இருந்த தீபக் சிவாச் பரங்கிமலை காவல் துணை ஆணையராகவும், சமாய் சிங் மீனா சென்னை கிழக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தீபக் சிவாச் வகித்த தமிழ்நாடு காவல் சிறப்பு படை ஆவடி பட்டாலியன் எஸ்.பி பணியிடத்துக்கு குமார் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட இந்த மாற்றத்தை பொறுத்த வரை கண்ணன் ஐ.பி.எஸ். மாற்றம் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வடக்கு மண்டல ஐ.ஜி. மாற்றப்பட்டிருப்பதன் பின்னணியில் உளவுத்துறை அறிக்கையும் முக்கிய பங்கு வகிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேற்கு மற்றும் தென் மண்டலத்திலும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் இருக்கக் கூடும் என கூறப்பட்ட நிலையில் அது போல் எதுவும் நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications