அடுத்தடுத்து வரும் விடுமுறை! மொத்தம் 1,100 பேருந்துகள்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

TN Govt Plan to run 1,100 special buses for weekend holidays and Gandhi Jayanti

இப்படி சொந்த ஊர் போகும் போது போதுமான பேருந்துகள் கிடைக்காததால் தனியார் பேருந்துகளை நோக்கி நகர்கின்றனர். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் நன்றாக காசு பார்க்கின்றன. எனவே பயணிகளின் வசதிக்காக இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"வார இறுதி நாட்கள், மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. இந்த வார வியாழக்கிழமை (28/09/2023) மிலாடி நபி, சனிக்கிழமை (29/09/2023) ஞாயிற்றுக் கிழமை (01/10/2023) மற்றும் திங்கள் கிழமையான காந்தி ஜெயந்தி (02/10/2023), ஐந்து நாட்கள் விடுப்பு கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பயணிகள் முன்பதிவும் கூடுதலாகவே உள்ளது. இதனால் வெளி ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன்படி முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும் மற்றும் பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும் பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்றைய தேதியில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்நாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 27/09/2023 அன்று 16,980 பயணிகளும் 29/09/2023 அன்று 14473 பயணிகளும் மற்றும் 03/10/2023 அன்று 7,919 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். மற்றும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 27/09/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும் மற்றும் 29/09/2023 அன்று 450 பேருந்துகளும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி. திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, 02/10/2023 அன்று திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட் கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 17,242 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc official app மூலமும் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+