விண்ணை முட்டும் காய்கறி விலை.. ரேசன் கடைகளில் மலிவாக விற்க அரசு தயார்.. அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: காய்கறிகள் விலை உயர்ந்தால் ரேசன் கடைகள் மூலம் காய்கறிகளை விற்கவும் அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில காய்கறிகளின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் வரத்து குறைந்துவிட்டது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்து விற்பனையாகிறது.

தக்காளி விலையைப் போல அவரக்காய், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.70க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையாகிறது.
பீட்ரூட் கிலோ ரூ.60, கேரட் கிலோ ரூ.80, அவரை கிலோ ரூ.100, வெண்டைக்காய் கிலோ ரூ.40, கத்திரிக்காய் கிலோ ரூ.50, பாகற்காய் கிலோ ரூ.65, பீர்க்கங்காய் கிலோ ரூ.70, புடலங்காய் கிலோ ரூ.50, கொத்தவரங்காய் கிலோ ரூ.60, இஞ்சி கிலோ ரூ.220, உருளைக்கிழங்கு கிலோ ரூ.30, முருங்கைக்காய் கிலோ ரூ.60, முட்டைகோஸ் கிலோ ரூ.25, சின்ன வெங்காயம் கிலோ ரூ.70, பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது.
வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. தென் மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் காய்கறிகள் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காய்கறி சந்தைகளுக்கு வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தக்காளியை பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். காய்கறி விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் நியாய விலைக்கடைகளில் கூட குறைந்த விலையில் காய்கறிகளை விற்க தயாராக உள்ளோம்.
கடந்த 2021ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தக்காளி கிலோ 150 ரூபாய்க்கும் அனைத்து காய்கறிகளும் ஒரு கிலோ 100 முதல் 150 வரைக்கும் விற்பனையானது. இதனையடுத்து ரேசன் கடைகளிலும் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் காய்கறிகள், தக்காளி, வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. அதே போல நடப்பாண்டும் காய்கறிகளை விற்பனை செய்ய தயாராக உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications