18 ஆண்டுகளில் 24 விசாரணை ஆணையங்கள்.. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கமிஷனுக்கு ரூ4.23 கோடி செலவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளில் மொத்தம் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு ரூ4.23 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

திருநெல்வேலியை சேர்ந்த சமூக ஆர்வலர் அ.பிரம்மா, கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் தொடர்பான முழுமையான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதனடிப்படையில் கிடைக்கப்பெற்ற விவரங்களின் தொகுப்பு:

18 விசாரணை ஆணையங்கள்

18 விசாரணை ஆணையங்கள்

2001-ம் ஆண்டு நீதிபதி ராமன் விசாரணையம் தொடங்கி கடைசியாக 2018-ல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் வரை மொத்தம் 18 ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 18 விசாரணை ஆணையங்களில், ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவை மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.

ஜெ. மரண விசாரணைக்கு ரூ3.52 கோடி செலவு

ஜெ. மரண விசாரணைக்கு ரூ3.52 கோடி செலவு

தற்போது இயங்கி வரும் இந்த 2 ஆணையங்களின் செயல்பாடுகள், செலவு விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகம் ஆணையம் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ரூ26,87,136.00 ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு முதல் 26.04.2019 வரை மொத்தம் 154 பேரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தடையால் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முழுமை அடையாமல் உள்ளது. மேலும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இதுவரை மொத்தமாக ரூ3,52,78,534 கோடி செலவிடப்பட்டுள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன்

நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன்

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எந்தெந்த பணிகளுக்கு எப்போது நியமனங்கள் செய்யப்பட்டன? அந்த பணிகளுக்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது? என்பது குறித்த விவரங்கள் விரிவாகவும் பதிலாகப் பெறப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ1.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு இதுவரை மொத்தம் ரூ4,23,65,557 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை செலவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை செலவு

ஆனால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தொடர்பான செலவு விவரங்களில், பொதுவாக ஊதிய மற்றும் ஊதியம் அல்லாத செலவுகள் என்று மட்டுமே வகைப்படுத்தப்பட்டு விவரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் 2018-19ம் ஆண்டில் ரூ1,14,33,786 செலவிடப்பட்டுள்ளது. 2019-20ம் ஆண்டில் ரூ1,23,69,954 செலவிடப்பட்டுள்ளது. 2020-21-ல் ரூ1,33,56,364 செலவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை ரூ52,05,453 செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு துணை செயலாளர் பதவி கடந்த பிப்ரவரி முதல் காலியாக உள்ளது; நீதிபதி அருணா ஜெகதீசனின் உதவியாளருக்கான ஊதியமும் 2020 முதல் தற்போது வரை கேட்கப்படவில்லை என்ற குறிப்பும் இந்த விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+