சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள்.. தமிழக அரசு வாபஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. மொத்தம் ஐந்து அவதூறு வழக்குளை திரும்ப பெற்றுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வராக இருந்த போது 2012 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் விஜயகாந்த் மீது ஐந்து அவதூறு வழக்குகள் போடப்பட்டது. பொது இடங்களில் அமைச்சர்கள் மற்றும் முதல்வரை தரக்குறைவாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

TN govt withdraws Defamation case against DMDK leader Vijayakanth

இந்த வழக்குகள் வெவ்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வந்தது இந்நிலையில் இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. விஜயகாந்த மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் ஆஜராகி வந்தனர்.

ஜெயலலிதாமறைவுக்கு பின் அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்தது.இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் இணைந்து சந்தித்து. இந்த கூட்டணி அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது.

புதர் மண்டிய பூங்காவில்..17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. முக்கிய குற்றவாளி மணிகண்டன் சரண்புதர் மண்டிய பூங்காவில்..17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. முக்கிய குற்றவாளி மணிகண்டன் சரண்

இந்நிலையில், விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குளை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதனையடுத்து, அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்தது. 5 வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், பிற 3 வழக்குகளை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

English summary
Tamilnadu government withdraws five Defamation case against DMDK leader Vijayakanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X