நீட் தேர்வில் விலக்கு பெறக்கூடாது என்பதுதான் அண்ணாமலையின் கொள்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்பது தி.மு.க.வின் கொள்கை என்றும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறக்கூடாது என்பது அண்ணாமலையின் கொள்கை எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி சென்ற அமைச்சர் மா சுப்ரமணியன், நீட் தேர்வு விவகாரம், எய்ம்ஸ் மருத்துவமனை, கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் முக்கிய கோரிக்கையாக வைத்தார்.

அண்ணாமலை கருத்து
இது தொடர்பாக கருத்து கூறியிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பதை விட்டு விட்டு நீட் தேர்வை நடத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் டெல்லி சென்று திரும்பிய அமைச்சர் மா சுப்ரமணியன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயனுள்ள சந்திப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் 10-க்கும் மேற்பட்டவற்றை கோரிக்கைகளாக முன் வைத்தோம்.தடுப்பூசி அளவை அதிகப்படுத்தவும் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தோம். இந்த சந்திப்பானது பயனுள்ளதாக அமைந்தது. தி.மு.க அரசு தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து உறுதியாக விலக்கு பெறும்.
Recommended Video

காலதாமதம்
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் காலதாமதம் ஏற்படுகிறது. தி.மு.கவின் கொள்கை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது . திமுக ஆட்சியில் நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற வேண்டும் என்பதே நோக்கம். இது தொடர்பாக தற்போது நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் எடுக்கப்படும்.

அண்ணாமலையின் கொள்கை
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது என்பது தி.மு.க தேர்தல் அறிக்கையின் கொள்கை. ஆனால் பாஜக அண்ணாமலையின் கொள்கை என்பது தமிழகத்தில் நீட் கொண்டுவர வேண்டும் என்பதாகும். பொதுமக்கள் பொது இடங்களில் விழாக்களை கொண்டாடுவது தன் உயிருக்கு உலை வைத்துக் கொள்ளும் செயல். இவ்வாறு அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications