“நீங்க ஆளும் மாநிலங்களை விட..” பாஜக எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரிப்ளை!
சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என பாஜக பெண் எம்.எல்.ஏவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை குறைக்கும் நோக்கிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும், கடும் தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த அரசில்தான். சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பதும் இந்த அரசுதான்.
அனைத்துப் பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். அதேபோல் பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடியும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வடை சிறை தண்டனையும் பெற்று கொடுக்க முடியும். குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய பாஜக மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சரஸ்வதி, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார். பாஜக எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கொடுத்தார்.
"பாஜக ஆளுகிற மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்கிறார்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க கடுமையான தண்டனைகளை விதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்திருக்கிறோம்" என பதில் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications