ஆளுநர் ஆர்.என் ரவியை திடீரென சந்தித்தது ஏன்? பேசியது என்ன?.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது ஏன், மனு கொடுத்தது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி அளித்தார்.
Recommended Video
9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வென்று திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. அதிமுக வெறும் 2 மாவட்ட கவுன்சிலர் இடங்களை மட்டுமே வென்றது. இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடந்து இருப்பதாக அதிமுக தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார். அதிமுக மூத்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவரிடம் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்து உள்ளது. இதை பற்றி ஆளுநரிடம் விளக்கமாக பேசி இருக்கிறோம். ஆளுநரிடம் இது தொடர்பாக மனு அளித்து இருக்கிறோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பலர் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் புகார் கொடுக்க சென்ற போது அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

ஆளுநர்
செங்கல்பட்டில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளருக்கு, அம்மாவட்ட ஆட்சியரை சந்திக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதிமுகவினர் வெற்றியை கூட முறையாக அறிவிக்கவில்லை. செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் பதவியில் வென்ற அதிமுக வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை. காலதாமதமாகவே அதிகாரிகள் வெற்றி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

புகார்
ஆனால் இதை பற்றி புகார் அளிக்க கூட ஆட்சியரை சந்திக்க முடியவில்லை. திமுகவினர் வெற்றிபெற்றால் மட்டும் உடனே அறிவித்தார்கள். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அதிமுகவினரை தோல்வி அடைந்தவர்களாக அறிவித்துள்ளனர். தேர்தலில் இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

முறைகேடு
இதை எல்லாம் பற்றித்தான் ஆளுநரிடம் நாம் புகார் அளித்தோம். ஆளுநரிடம் இது தொடர்பாக மனு அளித்து இருக்கிறோம். எந்தெந்த இடத்தில் எந்தெந்த தவறுகள், முறைகேடுகள் நடந்துள்ளது என்று முறையாக விளக்கம் அளித்துள்ளோம். இப்படி தேர்தலில் முறைகேடு நடக்கும் என்று தெரிந்துதான் தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றத்தை நாடினோம்.

நியாயப்படி நடக்கவில்லை
தேர்தல் ஆணையம் இதில் சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடுத்தோம். நீதிமன்றமும் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று கூறியது. ஆனால் நீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. மாறாக ஆளும் கட்சிக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தேர்தல் ஆணையம் நடந்தது.

9 மாவட்டம்
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதுவே திட்டமிட்டு முறைகேடு செய்ய வேண்டும் என்றுதான் நடத்தப்பட்டது. 2 கட்டங்களாக நடத்துவதால் இதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறினோம். அதேபோல்தான் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. இதை பற்றி ஆளுநரிடம் புகார் அளித்து இருக்கிறோம், என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.
-
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு!












Click it and Unblock the Notifications