கொரோனா: தமிழகத்தில் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா தாக்குதலை தடுக்க தமிழகத்தில் இன்று மாலை முதல் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இத்தடை உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு அறிவுறுத்தி உள்ளது.
Recommended Video
லாக் டவுன் விதிகள் என்ன? எந்த சேவைகள் இயங்கும்?
தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவு ஏப்ரல் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
144 தடை உத்தரவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

- எந்த ஒரு இடத்திலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூட கூடாது
- அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்
- அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் எதுவும் இயங்காது
- தேநீர் கடை உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் 5 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
- அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளும் மூடப்படும்.
- அரசு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மார்ச் 31-ந் தேதி வரை பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
- அனைத்து இடங்களிலும் அம்மா உணவகங்கள், ஆவின் பால் விற்பனை நிலையங்கள் இயங்கும்.
- மளிகை கடைகள், உணவகங்கள் செயல்படலாம். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை.
- பால், கால்நடை தீவனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்து செல்லலாம்
- அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையை தவிர்த்த பிற வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
- அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வ்வைக்கப்படுகிறது.
144 தடை உத்தரவை அமல்படுத்த அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் சாலைகளில் நடமாடுவோர் கண்காணிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
-
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம் -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
அடுத்து லாக்டவுன் தானா? அப்படியே கொரோனா மாதிரி.. முதலில் கேஸ் சப்ளை, இப்போ ஹோட்டல் மூடல்.. திக்திக்












Click it and Unblock the Notifications