Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டன் To சென்னை பறந்து வந்த மூத்த குடிமகன்! 1.5 லட்சம் செலவு! ஓட்டுக்கு வேட்டு வைத்த அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லண்டனிலிருந்து 1.5 லட்சம் ரூபாய் செலவு செய்து வாக்களிப்பதற்காகச் சென்னைக்கு வந்த மூத்த குடிமகன் ஒருவரை ஓட்டு இல்லை என்று சொல்லி அதிகாரிகள் வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. .

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

TN Lok Sabha Election 2024 A person who came from London to Chennai has no vote

சென்னையைப் பொறுத்த வரை வடசென்னையில் 60.13% ஆகவும் தென்சென்னையில் 54.27% ஆகவும் மத்திய சென்னையில் 53.91% ஆகவும் வாக்கு சதவீதம் பதிவாகி உள்ளது.

இது கடந்த 2019 ஆண்டை விடக் குறைவு. படித்தவர்கள் அதிகம் உள்ள சென்னையில் கூட வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்னும் உருவாகவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் லண்டனில் வாக்களிக்கவந்த ஒருவரை வாக்கு இல்லை என்று அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். அதற்கான நியாயத்தைக் கேட்டு அவர் குரல் எழுப்பி வருகிறார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் மக்களைவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக லண்டனிலிருந்து வந்திருந்தார். ஆசையாசையாக விடிந்ததும் வாக்குச்சாவடிக்குச் சென்று பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு இருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் பால்ராஜின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறியதோடு வாக்கு இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். அதனால் மனமுடைந்து போய்விட்டார் பால்ராஜ்.

TN Lok Sabha Election 2024 A person who came from London to Chennai has no vote

அவருக்கு என்ன நடந்தது? ஏன் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை?

"நான் சென்னை துறைமுகத்தில் வேலைபார்த்தேன். அதன்பிறகு அந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். என்னுடைய மகன் லண்டனில் இருக்கிறான்.

ஆகவே அவனைப் பார்ப்பதற்காக லண்டன் போய் இருந்தேன். அப்போதுதான் வரும் 19 ஆம் தேதி தேர்தல் என்று அறிவித்திருந்தார்கள். அதற்காகவே 17 ஆம் தேதியே சென்னைக்குத் திரும்பினேன்.

19ஆம் தேதி காலை எங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று பார்த்தேன். அங்கே போய் கேட்ட போது வாக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

சரி, அடுத்த வாக்குச்சாவடி போய் விசாரிக்கலாம் என்று போய் விசாரித்தால் அங்கேயும் பெயர் இல்லை. பல இடங்கள் போய் அலைந்து வாக்கு இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஏமாந்து போய் திரும்பினேன்.

ஆன்லைனில் போய் பார்த்தால் எனது பெயர் இல்லை. எனக்கு வாக்காளர் அட்டை இருக்கிறது. பல ஆண்டுகளாக இதே அட்டையை வைத்து வழக்கமாக ஓட்டுப் போட்டுள்ளேன். இந்தமுறைதான் ஓட்டு இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். விசாரித்தால் ஒரு பதிலும் இல்லை.

TN Lok Sabha Election 2024 A person who came from London to Chennai has no vote

அதிகாரிகளைக் கேட்டால் இந்த ஆவணங்களை அப்படியே நகல் எடுத்து மெயில் போடுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் எப்போது நடவடிக்கை எடுப்பது? எப்போது நான் ஓட்டுப் போடுவது?
நான் இதற்காக லண்டனிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவழித்து வந்திருக்கிறேன். அந்தப் பணத்தைத் தேர்தல் ஆணையம் எனக்குத் திரும்பக் கொடுக்குமா? இரண்டு மாத விசா எனக்கு வீணாகப் போய்விட்டது.

செலவைக் கூட விடுங்கள். எனக்கு இருந்த உரிமை இல்லாமல் போய்விட்டதே அதை யார் திரும்பத் தருவார்கள்? " என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார்.

"எனக்கு 69 வயது ஆகிறது. இதுவரை நான் இதே முகவரியில் உள்ள வாக்காளர் அட்டையை வைத்து ஓட்டுப் போட்டுக் கொண்டுதான் இருந்தேன். இதுவரை இப்படி ஆனதே இல்லை.

TN Lok Sabha Election 2024 A person who came from London to Chennai has no vote

அப்படி என்றால் என்ன அரசாங்கம் நடக்கிறது? யார் எனக்குப் பதில் சொல்வார்கள்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார் பால்ராஜ்.

அவரது மனைவிக்கு வாக்கு உள்ளது. ஆனால் பால்ராஜுக்கு வாக்கு இல்லை. அவரது மனைவியும் இவருமே சேர்ந்து போய் உள்ளனர். மனைவியை மட்டும் அதிகாரிகள் வாக்களிக்க அனுமதித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+