பாமக கோட்டையில் விழுந்த ஓட்டை! சௌமியா அன்புமணி வெற்றிக்கு வேட்டு வைத்த விசிக!
சென்னை: பாமக கோட்டையாகக் கருதப்படும் தர்மபுரியில் செளமியா அன்புமணி தோல்வியைச் சந்திப்பதற்கு விசிக முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்குப் போவது என்று கடைசிக் கட்டம் வரை கண்ணாமூச்சி ஆடிய கட்சி பாமக. பாஜக கூட்டணியில் மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிட்டது.

பாமகவின் கோட்டை என்று சொன்னால் அது தர்மபுரி என்பது பலரது பார்வையாக உள்ளது. அந்தத் தொகுதியில் மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தைச் சேராத அரசாங்கம் என்பவர் களம் இறக்கப்பட்டார்.
அந்தத் தொகுதியில் அன்புமணியை எதிர்பார்த்துக் காத்திருந்த பாமக தொண்டர்களுக்கே இந்தச் செய்தி ஷாக் கொடுத்தது. வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால்தான் சைலண்ட் ஆக, போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார் அன்புமணி எனக் காதுபட பல பேச்சுகள் எதிரொலித்தன.
அதை உணர்ந்த பாமக தலைமை, கட்சி தொண்டர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக வேட்பாளரை மாற்றி செளமியா அன்புமணியை அறிவித்தது. அது தொண்டர்களுக்கு மட்டுமல்ல; அந்தத் தொகுதி மாற்றுக் கட்சி வேட்பாளருக்குமே சர்ப்ரைஸ் ஆக அமைந்தது.
செல்வாக்குமிக்க குடும்ப பின்புலம் கொண்ட செளமியா அன்புமணியின் வெற்றி உறுதி என்றே பலரும் பேசினர். இன்னும் சொல்லப் போனால் அன்புமணியின் மகள்கள் பிரச்சார களத்திற்கு வந்த பிறகு மீடியாவின் ஒட்டு மொத்த கவனத்தை அந்த இருவரும் ஈர்த்தனர்.
தேர்தல் காலங்களில் Influencer உதவிகளை நாடும் அரசியல் கட்சிக்கு மத்தியில், செலவே இல்லாத Influencer ஆக அன்புமணி ராமதாஸ் மகள்கள் மாறினர். அவர்கள் செய்த பிரச்சார வீடியோக்கள் லட்சக்கணக்கில் பார்வையாளர்களை ஈர்த்தன.
அம்மாவின் வெற்றிக்காக மக்கள் செய்யப் பிரச்சாரம் ஒரு மேஜிக் போலப் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது. ஆகவே செளமியாவின் வெற்றி என்றே பலரும் ஊகித்தனர்.

கடந்த 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கிட்டத்தட்ட 13 சுற்றுவரை செளமியா அன்புமணி முன்னிலை இருந்தார். பாஜக வேட்பாளர்கள் கூட யாரும் முன்னிலை என்று தொகுதியில் கூட செய்தி வரவில்லை.
ஆனால், செளமியா அதைச் சாதித்தார். ஆனால், இறுதியாக அவர் திமுக வேட்பாளரிடம் தனது வெற்றியைப் பறிகொடுத்தார். அவரது தோல்விக்குக் காரணம் அரூர் தொகுதிதான். இந்தத் தொகுதிதான் திமுகவுக்கு இரண்டு மடங்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தது.
திமுக 85,850 வாக்குகளை வாங்கிய நிலையில், செளமியா வெறும் 46,175 வாக்குகளை மட்டுமே பெற்றார். இது காலை முதல் முன்னணியில் வகித்து வந்த செளமியாவின் வெற்றிக்கு வேட்டு வைத்தது. தர்மபுரியில் 50% வன்னியர்கள் உள்ளனர். ஆனால், வெற்றி என்பதைத் தீர்மானிப்பவர்கள் வேறு சமூகத்தினராகவே உள்ளனர். கூடவே பொது வாக்காளர்களும் சேர்ந்தால்தான் வெற்றி நிச்சயம்.
அப்படிப் பார்த்தால் அரூர் தொகுதியில் 20% வாக்குகள் பட்டியலினத்தவர். விசிகவின் ஓட்டு வங்கி. இதுதான் செளமியாவுக்கு எதிராக மாறியது.
மொத்தம் 6 சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குள் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய மூன்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் அதிமுக வசம் உள்ளது. பென்னாகரம், தர்மபுரி,மேட்டூர் ஆகிய மூன்றும் பாமக வசம் உள்ளது.
வெறும் 3இல் மட்டும்தான் வன்னியர் செல்வாக்கு அதிகம். அதிலும் அதிமுக, திமுக என வாக்கு வங்கிகள் கலந்துள்ளன.
2019இல் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் 5,04,235வாக்குகளைப் பெற்றிருந்தார். திமுக வேட்பாளர் செந்தில்குமார் 5,74,98 பெற்றிருந்தார். நாம் தமிழர் 19,674 வாக்குகள் பெற்றிருந்தது. இந்த முறை நாம் தமிழர் 65381 ஓட்டுகளைப் பெற்றுள்ளது.
செளமியா அன்புமணி 411367 வாக்குகளையும் அதிமுக வேட்பாளர் 293629 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதிமுக வாக்கு பாமகவுக்குக் கிடைத்திருந்தால், இன்று செளமியா அன்புமணி மத்திய அமைச்சராகி இருப்பார். ஏனென்றால் திமுக வேட்பாளர் வெறும் 21300 வாக்குகள் வித்தியாசத்தில்தான் செளமியாவை தோற்கடித்துள்ளார்.
தர்மபுரியில் பாமக இதுவரை 1998 தொடங்கி 1999, 2004 மற்றும் 2014 வரை 4 முறை வென்றுள்ளது. 1984இல் தம்பித்துரை மூலம் முதல் கணக்கைத் தொடங்கியது அதிமுக. அடுத்து 1989 மீண்டும் அதிமுக வென்றது. அதேபோல் 1980இல் திமுக இந்தத் தொகுதியில் முதல் கணக்கைத் தொடங்கியது. அதனை அடுத்து 2009, 2019, 2024 என மூன்று முறை இதுவரை வெற்றி பெற்றுள்ளது.
திமுக 2019இல் 47.01% வாக்குகளைப் பெற்றது. அதிமுக, பாஜக, பாமக என அனைத்துக் கட்சியின் கூட்டணியுடன் களம் இறங்கிய அன்புமணி 41.22% வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். இடைவெளி குறைந்தது 6% ஆக இருந்தது.
இந்தக் கணக்குகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தர்மபுரி பாமகவின் கோட்டை எல்லாம் கிடையாது. அது பிற கட்சிகளைப் போல சம பலத்துடன் உள்ள தொகுதி என்று சொல்லலாம். ஆனால், வெற்றிக்கு வேறு சமூக வாக்குகளும் வேண்டும். அது தவறும் போது வெற்றி சாத்தியமில்லை.
இதேபோல கடலூர் தொகுதியில் பாமக சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிட்டார். 205244 வாக்குகளை இவர் பெற்றுள்ளார்.

ஆனால் அங்கே காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 455053 வாக்குகளைப் பெற்று 185896 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 269157 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஒருவேளை பாமக கூட்டணியில் தேமுதிக, அதிமுக இருந்திருந்தால் இந்தத் தொகுதியில் பாமக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க முடியும்.
ஏனென்றால் பாமக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் இருவரும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டினார் மொத்தம் 4,74,401 ஓட்டுகள் வருகின்றன. திமுக வேட்பாளர் பெற்றுள்ளதோ 455053 தான். 19,348 சொச்சம் வாக்குகளில் திமுகவை பாமக வீழ்த்தி இருக்க முடியும்.
இவை எல்லாம் உதாரணங்கள் தான். '2026இல் வெற்றி நமதே: மன உறுதியுடன் இலக்கை நோக்கி வீறு நடை போடுவோம்' என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
அதேபோல் அவரது மனைவி செளமியா அன்புமணி மிக நாகரிகமாகத் தனது தோல்விக்குப் பிறகு பேசி இருக்கிறார். குறிப்பாக வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு வாழ்த்தையும் சொல்லி இருக்கிறார்.
இன்னும் கூடுதலாக இந்த மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார். அவர் உழைக்க வேண்டியது தர்மபுரி மக்களுக்கு மட்டும் இல்லை. பிற சமூக மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உழைக்க வேண்டும். அந்த மாற்றம் தான் சரியான முன்னேற்றம்!
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி












Click it and Unblock the Notifications