சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாதியில் கைவிட்ட ஃபனி.. தமிழகத்தை வாட்டி எடுக்க போகும் வெயில்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த மே மாதம் கடுமையான வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபனி.. இன்று அதிதீவிர புயலாக மாறும்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?

    சென்னை: தமிழகத்தில் இந்த மே மாதம் கடுமையான வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    தமிழகத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபனி புயல் ஏமாற்றம் அளித்து உள்ளது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஃபனி புயல் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த புயல் தற்போது தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த புயல் நாளை திசை மாறும் என்று வானிலை ஆய்வும் மையம் கணித்துள்ளது.

    ஃபனி.. இன்று அதிதீவிர புயலாக மாறும்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?ஃபனி.. இன்று அதிதீவிர புயலாக மாறும்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?

    எங்கு உள்ளது

    எங்கு உள்ளது

    இந்த புயல் திசை மாறுவதால் தமிழகத்திற்கு இருந்த ஆபத்து விலகி உள்ளது. ஆனால் தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து 1050 கிமீ தூரத்தில் உள்ளது. தற்போது இந்த இந்த புயல் தமிழகத்தில் இருந்து சுமார் 200 கிமீ அருகில் வரை வரும். அதன்பின் திசை மாறி சென்றுவிடும்.

    மழை

    மழை

    இதனால் தற்போது தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது. சென்னையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் நாளையும் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும்.

    மிக மோசம்

    மிக மோசம்

    ஆனால் நாளைய மழைக்கு பின் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோடை மழையும் பெய்யாது என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. மே மாதம் முழுக்க கடுமையான வெயில் அடிக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    எவ்வளவு

    எவ்வளவு

    இந்த ஃபனி ஏற்படுத்திய காற்று மாற்றம் காரணமாக தமிழகத்திற்கு வர வேண்டிய காற்று இந்த மாதம் வராது. இதனால் இந்த வருடம் மழைக்காலமும் தாமதமாகவே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் இதனால் அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu may see aserious of heavy heat this time due to a twist in Cyclone Fani.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X