''மருத்துவமனைகளில் இந்த வசதிகள் இருந்தால்தான் பெர்மிட் கொடுக்கப்படும்''.. மா.சு. திட்டவட்டம்!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உயிர் காக்க பயன்படும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை நிறுவியுள்ளது.இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
அப்போது காவேரி மருத்துவமனையின் செயலாக்க இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், மற்றும் மருத்துவ இயக்குனர் ஐயப்பன் பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்

ஆக்சிஜன் தட்டுப்பாடு
அதன் பின்னர் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:- தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் நாள்ளென்றுக்கு ஆக்ஸிஜன் 230 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு கையிருப்பு இருந்தது ஆனால் கொரோனா தொற்று அதிகரிப்பால் நாளொன்றுக்கு 450 மெட்ரிக் டன் தேவை இருந்தது. முதலில் அண்டை மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டு வந்தது.

தருவதை நிறுத்தினார்கள்
பின்னர் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவை மிகுதியாகவே ஆக்ஸிஜன் தருவதை நிறுத்தினார்கள். தமிழக முதல்வர் மீண்டும் மற்ற மாநிலத்தில் பேசி தமிழகத்திற்கு ஆக்சிஜன் பெறப்பட்டது மேலும் ஏராளமான தனியார் மருத்துவமனை என்னிடம் தொடர்பு கொண்டு எங்களிடம் ஆக்ஸிஜன் இல்லை எங்களிடம் உள்ள நோயளிகளை அரசு மருத்து மனைக்கு கொண்டு சொல்லுங்கள் என தெரிவித்தனர்.

கண்டிப்பாக வேண்டும்
ஆனால் இப்போது நிலைமை சீராக இருக்கிறது. இதுபோன்ற ஆக்ஸிஜன் தட்டுபாடு மேலும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் ஜெனரேட்டர், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அமைக்க வேண்டும்

சான்றிதழ்கள் வழங்கப்படும்
100 படுக்கை அறையுடன் புதிய மருத்துவமனை தொடங்கும் முன் கண்டிப்பாக ஜெனரேட்டர், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இருந்தால் தான் அந்த மருத்துவமனைக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மூன்றாவது அலை வந்தாலும் கூட அதை சமாளிக்க தனியார் மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வைத்திருக்க வேண்டும்

தடுப்பூசி
இது பேரிடர் காலத்தில் மட்டும் செயல்படுத்துவதற்கு அல்ல; எல்லா காலத்திலும் தேவையானது .தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் ஊக்கப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு 25% தடுப்பூசி வழங்கி வருகிறது. இதை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று மா சுப்ரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications